முரசு புயல் தாக்கத்தால் ஆந்திரக் கடற்பகுதியில் சிக்கி காணாமல் போன காசிமேட்டைச் சேர்ந்த ஒன்பது மீனவர்களும் உயிரிழந்துள்ளனர். கடைசியாக மாயமாக இருந்த ராஜேஷ், நாராயணன் ஆகியோரின் உடல்களும் நவம்பர் 8ஆம் தேதி ஆந்திரக் கரையில் கண்டெடுக்கப்பட்டதாக நவம்பர் 9ஆம் தேதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இதே காலகட்டத்தில் கோவை பெரியார் அறிவுலக நூல் கொள்முதல் சர்ச்சை அரசியல் மற்றும் ஊடக விவாதத்தின் மையமானது. இதனால் மீனவர் மரணச் செய்தி பின்னுக்குத் தள்ளப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது.பெரியார் அறிவுலக சர்ச்சை எந்த விதத்திலும், ஏற்புடையது அல்ல. வேரடி மண்ணோடு வெட்டி வீசப்பட வேண்டிய ஊழல் அது. யாரையும் விடக்கூடாது.ஆனால், ஒரு நேரத்தில் ஒரு விவகாரத்தில்தான் கவனம் செலுத்த முடியும் என்றால் அரசு நிர்வாகம் நடைபெறாது. அதற்குத்தான் துறைகள் பிரிப்பதும் பொறுப்புகள் கொடுப்பதும்.மீட்புப் பணியில் தாமதமா?குடும்பத்தினர், படகில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதும் தகவல் அளிக்கப்பட்டதாகவும், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் உடனடி மீட்பு நடவடிக்கை இல்லை என்றும் குற்றம்சாட்டினர். இதற்கு மாறாக, இந்தியக் கடலோரக் காவல் படை நவம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட விளக்கத்தில், வானிலை எச்சரிக்கைகள் வழங்கப்பட்டதாகவும், நவம்பர் 3ஆம் தேதி தகவல் கிடைத்த சில மணி நேரங்களுக்குள் விமானமும் கப்பலும் தேடுதலுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. நவம்பர் 3, 4, 5 ஆகிய தேதிகளில் தேடுதல் நடந்ததாகவும் கூறியுள்ளது.இந்த முரண்பாட்டைத் தீர்க்க புகார் அளிக்கப்பட்ட நேரம், அது எந்தக் கட்டுப்பாட்டு அறைக்கு எப்போது சென்றது, தேடுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நேரம், தமிழ்நாடு–ஆந்திர அதிகாரிகளுக்கிடையிலான தகவல் பரிமாற்றப் பதிவுகள் ஆகியவை வெளியிடப்பட வேண்டும். ஆனால், வெளிப்படைத்தன்மை விலை எவ்வளவு என்றிருக்கிறது நிலை.படகு உரிமையாளர் வழக்குமீனவர் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தது. புயல் எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னரும் படகு கடலுக்குச் சென்றதாக அரசு தரப்பு நீதிமன்றத்தில் கூறியதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.இதையடுத்து, நவம்பர் 6ஆம் தேதி படகு உரிமையாளர் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.பெரியார் அறிவுலகச் சர்ச்சையும் ஊடகக் கவனமும்பெரியார் அறிவுலக நூலகப் புத்தகக் கொள்முதலில் நூல்களின் உண்மைத்தன்மை, ஆசிரியர் விவரங்கள், விலை நிர்ணயம் குறித்து எழுத்தாளர்கள் கேள்வி எழுப்பினர். நவம்பர் 8ஆம் தேதி நூலகத் துறை இயக்குநரின் கூடுதல் பொறுப்பு மாற்றப்பட்டதாகவும், நவம்பர் 9ஆம் தேதி எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் உயர்நீதிமன்றக் கண்காணிப்பில் விசாரணை கோரினர்.இந்தச் சர்ச்சை முக்கிய ஊடக இடத்தைப் பெற்றது. அதே நேரத்தில் காசிமேடு மீனவர் விவகாரமும் உடல்கள் மீட்பு, குடும்பத்தினர் குற்றச்சாட்டு, நிவாரணம், வழக்கு, கடலோரக் காவல் படை விளக்கம் எனச் செய்தியாகத் தொடர்ந்தது.மீன்வளத்துறை அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை. மாறாக நிதித்துறை அமைச்சர் பதிலளித்தார்.இதற்கிடையில், அறிவுலகத்தை அதிரவைக்கும் செய்தி வெளியாக, லைட்டைத் திருப்பின காமிராக்கள்.அரசிடம் கேட்க வேண்டிய கேள்விகள்மீனவர்கள் காணாமல் போன முதல் தகவல் எப்போது கிடைத்தது? புகார்கள் எப்போது பதிவு செய்யப்பட்டன? தேடுதல் நடவடிக்கை எப்போது தொடங்கியது? புயல் எச்சரிக்கை இருந்தபோதும் படகு கடலுக்குச் சென்றதற்கான பொறுப்பு யாருக்கு? படகின் பதிவு, காப்பீடு, பாதுகாப்பு உபகரணங்கள் சரியாக இருந்தனவா? இந்தக் கேள்விகளுக்கான ஆவணங்களுடன் கூடிய பதிலை அரசு வெளியிட வேண்டும்.முதல்வர் உயிரிழந்த ஒவ்வொரு மீனவர் குடும்பத்துக்கும் ரூ.7 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். நிவாரணம் அவசியமானது; ஆனால் அது விபத்துக்கான காரணம் அல்லது நிர்வாகப் பொறுப்புக்கான பதிலாகாது.பெரியார் அறிவுலகச் சர்ச்சையும் விசாரிக்கப்பட வேண்டிய பொது நலப் பிரச்சினை. காசிமேடு மீனவர்களின் மரணமும் அதே அளவு வெளிப்படையான விசாரணையையும் பொறுப்புக் கணக்கீட்டையும் கோருகிறது. ஒன்றை ஒன்று விழுங்க விடாமல் இணையான விசா
ரணை செயல்பாடுகள் அவசியம்.