Exclusive அம்பேத்கர் அயலக கல்வி உதவித் திட்டம் – 300 பேர் நிலை என்ன?
- November 13, 2026
- 0
சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி தவெக அரசில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொன்ன 131 கோடி ரூபாய் பொய். 19.5 கோடிதான் வழங்கப்பட்டுள்ளது.
சட்டமன்றத்தில் அமைச்சர் வன்னி தவெக அரசில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக சொன்ன 131 கோடி ரூபாய் பொய். 19.5 கோடிதான் வழங்கப்பட்டுள்ளது.
6 மாத கால தவெக ஆட்சி குறித்து நிறைகளும் குறைகளும் பேசபட்டு வரும் இந்த வேளையில், மேலும் அதிர்ச்சி அளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டம் தொடர்பாக அண்மையில் வெளியான சர்ச்சை நாம் அனைவரும் அறிந்ததே!
மலேசியாவில் முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் தனக்கு கல்வி உதவித் தொகை வந்து சேரவில்லை என்று சமூக வலைதளங்களில் வெளியிட்டதும், மாணவர் முறையான ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை என்று அரசு பதில் கூறியதும் அந்த நேரத்து பெசுபொருளாக இருந்தன. இந்த விவகாரம் சட்டமன்றம் வரை சென்றது. ஆகஸ்ட் 20ஆம் தேதி சட்டமன்றத்தில் இதுகுறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது பதிலளித்த அமைச்சர் வன்னி அரசு கீழ்க்கண்ட தகவல்களக் கூறி இந்த விவகாரத்தை அப்போது முடித்து வைத்தார்.
அதாவது, “இந்த ஒரு மாணவர் அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறார். இந்தத் திட்டத்தின் கீழ் பணம் வழங்குவதில் எந்தத் தாமதமும் இல்லை. 2026-27 கல்வியாண்டில் மட்டும் 362 பேருக்கு பணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை வழங்கப்பட்ட தொகையான 84 கோடியை விட அதிகமாக, வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு தவெக அரசில் 131 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.” என்று பேசினார்.
சட்டமன்றத்தின் அவைக்குறிப்புகளில் ஏறிய இந்தத் தரவுகள், அரசின் நேரடித் தகவல்களாகவே பார்க்கப்படும். இனி ஆதாரப்பூர்வமாக இந்தத் தரவுகளைப் பயன்படுத்த முடியும் என்பதே இதன் நிலை. ஆனால்…
மேற்சொன்ன தரவுகள் அனைத்தும் அமைச்சர் சொன்னார் என்பது உண்மை. ஆனால் அந்தத் தரவுகள் எல்லாம் பொய் என்றால் நம்ப முடிகிறதா?


2026-27ஆம் ஆண்டில் 65 மாணவர்களுக்கு மட்டுமே அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்பட்டுள்ளது என்றும் அதன் மொத்த மதிப்பு 19.53 கோடி மட்டுமே என்று அதிர்ச்சி அளிக்கும் தகவலை, RTI பதிலாகத் தந்திருக்கிறது ஆதி திராவிடர் நலத்துறை. சென்னையை சேர்ந்த பத்திரிகையாளர் ஞானப்பிரகாஷ் பதிவு செய்த கேள்விகளுக்குத்தான் அரசு மேற்கண்ட பதிலைத் தந்திருக்கிறது.
2026-27 கல்வியாண்டில், இந்த உதவித் தொகைக்காக தேர்வு செய்யப்பட்டவர்கள் 365 பேர். அதில் 65 பேருக்கு மட்டுமே பணம் சென்றது என்றால், மீதமிருக்கும் 300 பேர் என்ன ஆனார்கள் என்பதை அரசு தான் விளக்க வேண்டும்.
ஆனால், ஏற்கனவே அரசு விளக்கிய தரவுதான் இப்படி கேள்விக்குறியாக இருக்கிறது என்பதும் கவனிக்கத்தக்கது.
ஒடுக்கப்பட்ட மாணவர்களின் உயர்கல்விக்கான இந்தத் திட்டத்தில் குளறுபடிகள் இருப்பதே வருத்தத்துக்குரியது. அதிலும் அரசுத் தரவுகள் இப்படி பொதுமக்களுக்குப் பொய் சொல்லும் என்றால் யாரை நம்புவது?

இந்தக் கட்டுரைவெளியான பிறகு அரசு இது குறித்து விளக்கம் அளித்தது செய்தி மற்றும் விளம்பர துறையின் அதிகாரப்பூர்வ ட்ரீட்டர் பக்கத்தில் வெளியான செய்தி குறிப்பின்படி இந்த ஆண்டு 366 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டதாகவும் அதில் இதுவரை 84 பேருக்கு சுமார் 30 கோடி ரூபாய் உதவித்தொகையாக வழங்கப்பட்டிருக்கிறது என்றும் அச்செய்தி குறிப்பு தெரிவித்தது.
மேலும் இந்த rti தகவல்களில் உண்மை இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார் சட்டபூர்வமாக நிறுவப்பெற்ற ஒரு அரசின் தகவல்கள் அதே சட்டப்பூர்வ அரசின் அமைச்சர் ஒருவரால் மறுக்கப்படுவது உண்மை இல்லை என்று விமர்சிக்கப்படுவது வரலாற்றில் இது முதல்முறையாக இருக்கக்கூடும் என்கிறார் வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ரேவதி.
இந்த விவகாரத்தில் அரசுகள் ஒன்றுக்கொன்று குறை கூறுவதை விட மாணவர்களின் சிக்கல் என்ன என்பதை புரிந்து கொண்டு அதை சரி செய்ய முயற்சிப்பதே சரியான நடவடிக்கையாக இருக்கும் கொடுக்கப்பட்ட மாணவர்களின் நலனுக்காக செய்யப்பட்ட திட்டம் என்பதை கடந்து இது அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு அரசு வழங்க வேண்டிய நம்பிக்கை என்பதை அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு.