கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு செய்தார்.
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல் காரணமாக தென்காசி மாவட்டத்தில் தமிழக கேரள எல்லையில் அமைக்கப்பட்ட சோதனைச் சாவடியை மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு செய்தார்.
கேரள மாநிலம் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்து சிறுவன் உயிரிழந்தான். மேலும் தொடர்பில் இருந்த பல்வேறு நபர்களுக்கு வைரஸ் தொற்று பரவிய நிலையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் சிலருக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகள் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழக – கேரள எல்லை
நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக தமிழக – கேரள எல்லை பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு மருத்துவத்துறை சார்பில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சோதனைச் சாவடி
இந்நிலையில் தென்காசி மாவட்டம் புளியரை அருகே, தமிழக கேரளா எல்லைப் பகுதி சோதனைச் சாவடியில் நிபா வைரஸ் சிறப்பு கண்காணிப்பு சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச் சாவடி 24 மணி நேரம் செயல்படக்கூடியது. மூன்று நிபா வைரஸ் களப் பணியாளர்கள், ஒரு சுகாதார ஆய்வாளர் உள்ளிட்டோர் மற்றும் மூன்று குழுக்களாக மூன்று வேளை அடிப்படையில் ஸ்கிரீனிங் சோதனை நடைபெற்று வருகிறது.
தீவிரமாக கண்காணிப்பு
இந்த நிலையில், சோதனை சாவடியில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் நேரடியாக இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் முழுமையான பரிசோதனைக்கு பின்னரே தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனரா என்பதை பார்வையிட்டார்.
சோதனையில் யாருக்கேனும் காய்ச்சல் கண்டறியப்பட்டால் உடனடியாக, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டது.