பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறித்து வெளியான செய்தி அறிக்கைகளை மேற்கோள் காட்டி, தமிழக அரசின் சட்டம்-ஒழுங்கு நிர்வாகம் மீது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
“Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்”
“சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்” என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது,
பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு ‘கால்ஷீட்’ எப்போது? அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் – சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா? #WhySilentCM?”
இந்தப் பதிவுடன் இணைக்கப்பட்டிருந்த செய்தித்தாள் படங்களில், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் 24 மணி நேரத்திற்குள் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பல்வேறு பாலியல் குற்றச்சம்பவங்கள் பதிவானதாக கூறப்பட்ட தகவல்கள் இடம்பெற்றிருந்தன. அவற்றை சுட்டிக்காட்டிய அவர், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் நலன் குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.