31/08/2026
News

சரக்கு வாகனங்களில் பள்ளி மாணவ, மாணவிகள்

  • July 29, 2025
  • 0

மேலூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாமல் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்… மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள செம்மனிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த

சரக்கு வாகனங்களில் பள்ளி மாணவ, மாணவிகள்

மேலூர் அருகே போதிய பேருந்து வசதி இல்லாமல் சரக்கு வாகனங்களில் ஆபத்தான முறையில் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள்…

மதுரை மாவட்டம் கீழவளவு அருகே உள்ள செம்மனிபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், அருகில் உள்ள கிராம பகுதிகளைச் சேர்ந்த 200கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் காலை மற்றும் மாலை நேரத்தில் பள்ளி செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாமல் சுமதிபுரம், முத்துச்சாமிபட்டி, உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆபத்தான முறையில் சரக்கு வாகனங்களில் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதி மக்கள் கூறும்போது..மேலூரில் இருந்து, காலை 09.30, மதியம் 01.00 மற்றும் இரவு 07.00 மணியளவில் என மூன்று முறை பேருந்து இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் பள்ளி செல்லும் நேரத்தில் பேருந்து வசதி இல்லாததால் இதுபோன்று ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அதனால் மாணவர்களின் கல்வி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும் இப்பகுதிக்கு போதிய பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்…