08/08/2026
தமிழ்நாடு

“கண்ணை மூடி கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்” – சண்முகம்

  • August 7, 2026
  • 0

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு, மேகலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியரிடம்

“கண்ணை மூடி கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்” – சண்முகம்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு, மேகலை மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள மலை கிராமங்களில் வசிக்கும் மலைவாழ் மக்களை வனத்துறையினர் வெளியேற்றும் நடவடிக்கை தடுத்து நிறுத்தி உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட ஆட்சியரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கோரிக்கை மனு அளித்திருந்தார்.

இதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதனை நேரில் சந்தித்து மலைவாழ் மக்களை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதை வனத்துறையினர் நிறுத்த வேண்டும் என கோரிக்கை வலியுறுத்தினார்.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சண்முகத்துடன் தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன், ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் விவசாய பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம்;

2026 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் இந்த மலைவாழ் மக்கள் வெளியேற்ற வேண்டும் என்றும், இதற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் துணை ராணுவத்தை பயன்படுத்தி கொள்ளலாம் என்று கூறியுள்ளது

மக்களை வெளியேற்றுவதற்கு நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் நீதி இல்லை “கண்ணை மூடி கொண்டு தீர்ப்பு வழங்கியுள்ளனர்”

வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் மக்களுக்கு எதிராக துணை ராணுவத்தை வழங்க வேண்டும் என கூறுகிறார்கள் இந்த தீர்ப்புக்கு எதிராகக் எனது வன்மையான கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்.

சட்டம் எங்களுக்கு சாதகமாக உள்ளது என்பதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் தெரிந்துகொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகள் வசித்து வந்த மலைவாழ் மக்களுக்கு பட்டா உள்ளிட்டவை வழங்காத தமிழக அரசை நீதிமன்றம் முதலில் கண்டித்திருக்க வேண்டும் ஆனால் அதை செய்யவில்லை.

நாங்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல நாங்கள் நிலத்திற்கு சொந்தக்காரர்கள, வனம் எங்கள் நிலம், பட்டா கொடுக்காதது உங்கள் தவறு. நிலத்தை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம் இதை அரசுக்கும், நீதிமன்றத்துக்கும் நாங்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

மக்கள் வசிக்கின்றனாரா அல்லது புலிகள் உள்ளதா என மத்திய குழு ஆய்வு செய்யாமல் பெயரளவில் மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று அறிக்கை அளித்துள்ளார்கள். 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டத்தின் படி வனத்துறை செயல்படுத்த வில்லை என்றால் 2016 ஆம் ஆண்டு வன்கொடுமை சட்டத்தின் கீழ் புகார் தெரிவிப்போம் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *