07/08/2026
தமிழ்நாடு

உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது.. – புகழேந்தி

  • August 4, 2026
  • 0

உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும்

உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது.. – புகழேந்தி

உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் என தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தவெக முதன்மை செய்தி தொடர்பாளர் புகழேந்தி கோவையில் உள்ள தனியார் ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது எனக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு தவெக விற்கு நன்றி என்றும் எனது பொறுப்பை நான் செவ்வனே செய்வேன் தவெகவிற்கு பீரங்கியாக செயல்படுவேன் என்று தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலின் கைது தொடர்பான கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் அவ்வாறு பேசினால் கைது செய்யாமல் என்ன செய்வார்கள்? சம்பந்தமில்லாத நடிகையை பற்றி பேசுகிறார்கள் என்றார்.

மேலும் பேசுவதை பேசிவிட்டு காவிரியை கூறினேன் என குறிபிடுகிறார் உதயநிதி என்றும் காவிரி தாயையும் அசிங்கபடுத்துகிறார்கள் என்றும் தெரிவித்தார். உதயநிதி ஸ்டாலின் பேசுவது நன்றாக இல்லை என்ற அவர் சட்டசபையிலும் பெண்கள் அதிகம் உள்ளார்கள் அங்கு விட்டால் அங்கும் அப்படி தான் பேசுவார்கள் என்றார்.
திமுகவினருக்கு தோற்ற வெறி அடங்கவில்லை என்றும் விமர்சித்தார்.

தமிழக முதல்வரை வர வேண்டாம் என்று கர்நாடக முதல்வர் தான் கூறுகிறார் அப்படி என்றால் திமுகவினரால் கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரை எதிர்த்து பேச முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

திரிஷா ஒரு நடிகை அவர் அவரது வேலையை பார்த்து கொண்டிருக்கிறார், உதயநிதி ஸ்டாலின் அவரது அப்பாவிடம் போய் எவ்வாறு பேச வேண்டும் என கேட்க சொல்லுங்கள் இறந்தவரை கூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் என்றார்.

சட்டம் அதன் கடமையை செய்கிறது என்றும் உதயநிதி ஸ்டாலின் கைது சரியானது தான் சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது இனிமேல் இது போன்று நடவடிக்கைகள் தான் பாயும் என்றார்.

மேலும் தமிழ்நாடு முழுவதும் தவெக போராட்டம் நடைபெறும் என்றார். ஆளுங்கட்சியை எதிர்த்து பேச ஒரு முறை உள்ளது என்றார். சட்டமன்றத்திற்கு திமுகவினர் செல்லக்கூடாது என்பதற்காகத்தான் இவ்வாறு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று விமர்சனங்கள் எழுந்து வருவது குறித்தான சட்டமன்றத்திற்கு அவர்கள்(திமுக) மக்கள் பணி ஆற்றவா செல்கிறார்கள்? என்றார்.

முதலில் அவர் மன்னிப்பு கேட்கட்டும் இறந்தவர்களை கூட அவதூறாக பேசாதவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் என்றார். உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் பேசியதும் காவிரி பெருக்கெடுத்து வந்துவிட போகிறதா? என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *