11/09/2026
தமிழ்நாடு

என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் – எம்பி தங்க தமிழ்ச்செல்வன்

  • August 7, 2026
  • 0

மலைவாழ் மக்களுக்கு எதிராக வனத்துறையினர் ஏதாவது விபரீதம் நடைபெற்றால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என, தேனியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு; தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு,

என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் – எம்பி தங்க தமிழ்ச்செல்வன்

மலைவாழ் மக்களுக்கு எதிராக வனத்துறையினர் ஏதாவது விபரீதம் நடைபெற்றால் என்னுடைய எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் என, தேனியில் நடைபெற்ற மலைவாழ் மக்கள் போராட்டத்தில் தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் பேச்சு;

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே வருசநாடு, மேகமலை உள்ளிட்ட 90-க்கும் மேற்பட்ட மலைகள் வசிக்கும் மக்களை வனத்துறை இதழ் வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து.

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சுமார் 5000க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட தேனி எம்.பி தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது;

தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு 30 ஆண்டுகளில் இந்த அளவு ஒரு பெரிய போராட்டதை இதுவரை பார்த்து இல்லை. எங்கள் சொத்தை எங்களுக்கு கொடுத்துவிட்டு மீதி சொத்தை வனத்துறை எடுத்துக்கொள்ளட்டும்.

நீதிமன்றம் தீர்ப்பு அளித்தும் முல்லை பெரியாறு அணையை 152 அடியாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை ஆனால் மக்களை வெளியேற்றுவதில் மட்டும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இன்று டெல்லியில் பாராளுமன்றம் நடைபெறுகிறது, விடுமுறை அளித்துவிட்டு உங்கள் போராட்டத்தில் கலந்துகொண்டு உள்ளேன்.

நீங்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற்ற நான் உங்களை வெளியேற்றும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஏதாவது விபரீதம் செய்தால் என்னுடைய எம். பி பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.