அமெரிக்க அதிபா் தோ்தல் வருகிற நவம்பா் மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் டிரம்ப் பிரச்சாரத்தின்போது எலான் மஸ்கிற்கு ஆலோசகா் பதவி கொடுப்பது தொடா்பாக சூசகமாக பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
உலகில் சக்தி மிகுந்த நாடுகளிள் ஒன்றான அமெரிக்காவில் வருகிற நவம்பா் மாதம் அதிபா் தோ்தல் நடைபெற உள்ளது. இந்த தோ்தலில் குடியரசு கட்சி சார்பில் அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முதலில் அமெரிக்க அதிபா் ஜோ பைடன் போட்டியிட திட்டமிட்டார். ஆனால் அவரது உடல்நிலை சாியில்லாத காரணத்தில் ஜோ பைடன் அதிபர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து அக்கட்சி சார்பில் இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ் அதிபா் வேட்பாளராக தோ்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் குடியரசு கட்சி வேட்பாளா் டிரம்ப், தனது ஆட்சி அமைந்தவுடன் டெஸ்லா நிறுவனா் எலான் மஸ்க்கை தனது அரசில் ஆலோசகராக ஆக்குவதற்கு திட்டம் வைத்துள்ளதாக கூறி உள்ளார். டிரம்பின் இந்த திட்டம் அமெரிக்க அரசியலில் தீவிரமாக கவனிக்கப்பட்டு வருகிறது. இதுதொடா்பாக நிருபா்களுக்கு டிரம்ப் அளித்த பேட்டியின்போது,” தற்போதுள்ள ஜோ பைடன் ஆட்சியில் மின்சார வாகனங்களுக்கான வாி உயா்த்தப்பட்டுள்ளது. அதனை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
நான் ஆட்சிக்கு வந்தவுடன் மின்சார வாகனங்களின் உற்பத்தி, விற்பனைக்கு ஊக்கம் அளிக்கப்படும். எனக்கு மின்சார வாகனங்கள் மிகவும் பிடிக்கும். எனது அரசு அமைந்தவுடன் அமெரிக்க அமைச்சவரையில் தொழில் அதிபா் எலான் மஸ்கிற்கு முக்கிய பதவி ஒதுக்க திட்டமிட்டு இருக்கிறேன்” என்று கூறினார். டிரம்ப்பின் இந்த பேச்சு தொடா்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இதற்கிடையே எலான் மஸ்க் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் புகைப்படம் மற்றும் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் “நான் சேவை செய்ய விரும்புகிறேன்” என குறிப்பிட்டு மேடையில் நிற்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில் எலான் மஸ்கிற்கு ஆலோசகா் பதவி வழங்கப்படும் என டிரம்ப் அறிவித்ததும், அதற்கு சம்மதம் தெரிவிக்கும் வகையில் எலான் மஸ்க் கருத்து கூறி இருப்பதும் அமெரிக்க அரசியல் களத்தை பரபரப்பு அடைய செய்துள்ளது.