News அரசியல் உலகம்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

  • July 14, 2024
  • 0

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர். வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்

டிரம்ப் மீதான துப்பாக்கி சூடு.. தெரிந்தும் கண்டுகொள்ளாமல் இருந்த சீக்ரெட் சர்வீஸ்.. நடந்தது என்ன ?

டொனால்ட் டிரம்ப் பிரச்சாரத்திற்கு ஈடுபடுவதற்கு முன்பே அங்கிருந்த ஒரு கட்டிடத்தின் மேற்கூரை மீது ஒரு நபர் ஓடுவதாக பொதுமக்கள் சிலர் சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டெனால்ட் டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே அதிர வைத்துள்ள நிலையில், அந்நாட்டின் சீக்ரெட் சர்வீஸ் மீது பழி விழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளன. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப்பே மீண்டும் போட்டியிடுகிறார். அதேபோல, டெமாக்ரடிக் கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன் களம் காண்கிறார். இதையடுத்து, அவர்கள் இருவரும் நேருக்கு நேர் விவாதித்துக் கொள்ளும் நிகழ்ச்சிகளும், பிரச்சாரங்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அந்த வகையில், இன்று காலை அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது மர்ம நபர் ஒருவரால் டிரம்ப் துப்பாக்கியால் சுடப்பட்டார். அதிர்ஷ்டசவமாக டிரம்ப் தலையை திருப்பியதால் அந்த துப்பாக்கி குண்டு அவர் தலையில் படாமல் இடது காதை உரசிக் கொண்டு சென்றது. குண்டு பட்டவுடன் டிரம்ப் சுருண்டு கீழே விழுந்தார். இதை கண்ட அங்கிருந்த மக்கள் பயத்தில் கத்தினர். இதையடுத்து, அங்கிருந்த சீக்ரெட் சர்வீஸ் வீரர்கள் உடனடியாக டிரம்ப்பை மீட்டு, இரண்டே நிமிடத்தில் அவரை அங்கிருந்து காரில் கொண்டு சென்றனர். மேலும், போலீஸாரும், மற்ற சீக்ரெட் சர்வீஸ் வீரர்களும் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீஸார் சுட்டுக் கொன்றனர். விசாரணைில் அவரது பெயர் தாமஸ் மேத்யூ (20) என்பது தெரியவந்தது. அவர் எதற்காக டிரம்ப்பை சுட்டார் என்பது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, டிரம்பின் பிரச்சார நிகழ்ச்சி தொடங்குவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு அங்குள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரையில் கையில் துப்பாக்கி போன்ற கருவியுடன் ஒருவர் ஓடுவதாக பொதுமக்களில் சிலர் சீக்ரெட் சர்வீஸ் படையினரிடம் தெரிவித்துள்ளனர். ஆனால், சீக்ரெட் சர்வீஸ் படையினர் அதை அலட்சியப்படுத்தியுள்ளனர். மேலும், அதுகுறித்து அவர்கள் போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்காமல், சர்வசாதாரணமாக கடந்து சென்றிருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து, இந்த விஷயத்தை போலீஸாரிடம் அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, சீக்ரெட் சர்வீஸ் இயக்குநருக்கு காவல்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவில் முன்னாள், இந்நாள் அதிபர்களை பாதுகாக்க சீக்ரெட் சர்வீஸ் என்ற அமைப்பு செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது