ஒரே நாளில் தங்கம் விலை குறைவு.. மகிழ்ச்சியில் மக்கள்
July 23, 2024
0
தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே உயர்ந்து வந்த நிலையில், இன்று பட்ஜெட் எதிரொலியாக பவுனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது. இன்று காலை 9.30 நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,810-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.54,480-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை கடந்த சில நாள்களாகவே உயர்ந்து வந்த நிலையில், இன்று பட்ஜெட் எதிரொலியாக பவுனுக்கு ரூ.2,080 குறைந்துள்ளது.
இன்று காலை 9.30 நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ரூ.6,810-க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.54,480-க்கும் விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.95.60 ஆகும்.
இன்று மத்திய பட்ஜெட் தாக்கலானது. அதில் தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இதன் விளைவாக, தற்போது மதியம் 2.30 மணியளவில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.260 குறைந்து ரூ.6,550 ஆகவும், பவுனுக்கு ரூ.2,080 குறைந்து ரூ.52,400 ஆகவும் விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் வெள்ளி விலையும் ரூ.3.10 குறைந்து ரூ.92.50-க்கு விற்பனையாகி வருகிறது.