அரசியல் இந்தியா தமிழ்நாடு

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

  • March 17, 2024
  • 0

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும்

தேர்தல் நடத்தை விதிகள் என்றால் என்ன?

இந்தியாவில் 18 ஆவது மக்களவைக்கான பொதுத்தேர்தல் எதிர்வரும் ஏப்ரல் 19 முதல் மே 22 வரை இல் நடைபெற உள்ளது.

தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டால், இனி அனைத்து கட்சிகளும் அரசியல் பிரமுகர்களும் பிரதிநிதிகளும் வழக்கம் போல மக்களை கவரும் விதத்தில் அறிவிப்போ பதாகைகளோ வைக்க முடியாது.

தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளுக்கு கட்டுப்பட்டுதான், இனி தேர்தல் முடிவுகள் வரும்வரை அனைத்தும் நடைபெற வேண்டும்.

தேர்தல் நடத்தை விதிகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் பொது நடத்தை எப்படி இருக்க வேண்டும், தேர்தல் கூட்டங்கள் நடத்துவது, ஊர்வலம் செல்வது தொடர்பான விதிமுறைகள் என்ன, வாக்குப்பதிவு நாளில் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், வாக்குச் சாவடியில் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு ஆளுங்கட்சியினர் எந்த விதமான அரசு அறிவிப்புகள், பதவியேற்பு, அடிக்கல் நாட்டு விழா, பூமி பூஜை போன்ற நிகழ்ச்சிகளைச் செய்ய முடியாது என விதிமுறைகள் குறிப்பிடுகின்றன.