News தமிழ்நாடு

திடீர் எச்சரிக்கை விடுத்த தமிழ்நாடு வெதர்மேன்..!

  • July 12, 2024
  • 0

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் மீண்டும் மழை வெளுத்து வாங்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கோடைக்காலத்தில் வெப்ப அலை காரணமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது முதல் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. கன்னியாகுமரி முதல் வட மாவட்டங்கள் வரை அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் பகல் நேலரங்களில் வெயில் வாட்டி வதைத்தாலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் பெய்யும் மழை வெயிலின் தாக்கத்தை சரிக்கட்டி வருகிறது. இதன் காரணமாக வெப்பத்தில் இருந்து மக்கள் தப்பித்து வருகின்றனர். தொடர் மழையால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதள பக்கத்தில் மழை முன்னறிவிப்பு குறித்து பதிவிட்டுள்ளார். அதில், இன்று பிரகாசமான நாளாக உள்ளது. நான் எதுவும் சொல்லவில்லை காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்று மாலை அல்லது இரவு என்ன கிடைக்கப்போகிறது என்பது உங்களுக்கே தெரியும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் தமிழகம் முழுக்கவும் பரவலாக டமால் டுமில் மழை இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் குறிப்பிட்டுள்ளார். வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை பகுதிகளில் மழை பெய்யும் என்றும், சேலம், நாமக்கல், ஈரோடு பகுதிகள், கொடைக்கானல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்களில் மழை பொழிவு இருக்கும் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.