News அரசியல் உலகம்

வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? செபி தலைவருக்கு சவால்

  • August 13, 2024
  • 0

நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள செபி தலைவர் வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? என ஹிண்டன்பர்க் நேரடி சவால் விடுத்துள்ளது. முறைகேடு புகாருக்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த நிலையில் ஹிண்டன்பர்க் அதிரடி அமெரிக்காவை தலைமையிடமாக

வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? செபி தலைவருக்கு சவால்

நிதி முறைகேடு குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள செபி தலைவர் வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? என ஹிண்டன்பர்க் நேரடி சவால் விடுத்துள்ளது. முறைகேடு புகாருக்கு மறுப்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்த நிலையில் ஹிண்டன்பர்க் அதிரடி

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு ஹிண்டன்பர்க் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் சர்வதேச அளவில் நிறுவனங்களின் நிதி முறைகேடு ஆகியவற்றை அம்பலப்படுத்தி வருகிறது. அதானி குழும நிறுவனங்களில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக கூறி அறிக்கை ஒன்றை இந்த நிறுவனம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து அதானி குழும முறைகேடுகள் குறித்து இந்திய பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பு (செபி) விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

இதனை தொடர்ந்து செபியும் அதானி குழும முறைகேடு பற்றி விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே செபி அமைப்பு தலைவர் மாதபி புரி புச் மற்றும் அவரது கணவர் சேர்ந்து பல்லாயிரக்கணக்கு மதிப்பிலான அதானி நிறுவன பங்குகளை வாங்கி இருப்பதாக ஹிண்டன்பர்க் நிறுவனம் மற்றொரு பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

இதனால் ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகள் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கைகள் வைத்து வருகின்றனர். மேலும் இதன் பின்னணியில் பாஜக இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறி வருகின்றன. ஆனால் பங்குகளை வாங்கியதாக கூறப்படும் ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்து செபி தலைவர் மற்றும் அவரது கணவர் தங்கள் வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் நிதி முறைகேடு குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவிக்கும் செபி தலைவர் மாதபி புரி புச் வெளிப்படையான விசாரணைக்கு தயாரா? என ஹிண்டன்பர்க் தரப்பில் சவால் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஹிண்டன்பர்க்கின் நேரடி சவாலால் செபி அமைப்பு தலைவர் செய்வதறியாது திகைத்து போய் உள்ளனர்.