13/06/2026
News அரசியல்

நான் 100 சதவீதம் fit ஆக இருக்கிறேன் – டாக்டர் ராமதாஸ் பேட்டி

  • June 7, 2025
  • 0

நான் மருத்துவர் சிகிச்சைக்காக சென்னை செல்லவில்லை, எனது உடல் நலம் நன்றாக இருக்கிறது, சென்னையில் உள்ள உறவுகளை பார்ப்பதற்காக செல்கிறேன். நான் 100 சதவீதம் fit ஆக இருக்கிறேன். ஆடிட்டர் குருமூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார், அன்புமணி ராமதாஸ் வந்தார்

நான் 100 சதவீதம் fit ஆக இருக்கிறேன் – டாக்டர் ராமதாஸ் பேட்டி

நான் மருத்துவர் சிகிச்சைக்காக சென்னை செல்லவில்லை, எனது உடல் நலம் நன்றாக இருக்கிறது, சென்னையில் உள்ள உறவுகளை பார்ப்பதற்காக செல்கிறேன்.

நான் 100 சதவீதம் fit ஆக இருக்கிறேன். ஆடிட்டர் குருமூர்த்தி பேசிக் கொண்டிருக்கிறார், அன்புமணி ராமதாஸ் வந்தார் என்னை பார்த்தார், பேசினார்.
தைலாபுரத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேட்டி

திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக தொடர்ந்து பரபரப்பாக காணப்படுகிறது, பழைய நிர்வாகிகள் நீக்கம், புதிய நிர்வாகிகள் அறிவிப்பு, மகளிர் மாநாடு குறித்து ஆலோசனை கூட்டம், கட்சியின் கௌரவ தலைவர் ஜி கே மணி வன்னியர் சங்கத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுடன் ஆலோசனை, பாட்டாளி மக்கள் கட்சியினர் எதிர்பார்த்த த ராமதாஸ் அன்புமணி சந்திப்பு, சைதை துரைசாமி மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியின் திடீர் சந்திப்பு, என தொடர்ந்து தைலாபுரம் தோட்டம் தமிழக மக்களை திரும்பிப் பார்க்க வைத்துக் கொண்டிருக்கிறது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி வருகிறது

இந்நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் சென்னை தனியார் மருத்துவமனையில் மூன்று நாள் தங்கி உடல் முழு பரிசோதனை மேற்கொள்ள இருக்கிறார் என்ற தகவல் வெளியாகிறது

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தைலாபுரம் தோட்டத்தில் இருந்து தனது மனைவி சரஸ்வதி அம்மாளுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது காரில் சென்னை புறப்பட்டார், வெளியே வந்த அவர் காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசினார் டாக்டர் ராமதாஸ்

நான் மருத்துவ சிகிச்சைக்காக சென்னை செல்லவில்லை, எனது மகள்கள் பேரன்கள் பேத்திகள் என உறவுகளை பார்ப்பதற்காக சென்னை செல்கிறேன் என்று தெரிவித்தவர், எனது உடல் நலம் நன்றாக இருக்கிறது, 100 fit ஆக இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார், ஆடிட்டர் குருமூர்த்தி வருகை குறித்து கேட்டபோது ஆடிட்டர் குருமூர்த்தி வந்தார் பேசிக் கொண்டிருக்கிறார், ஆடிட்டர் குருமூர்த்தி நீண்ட கால நண்பர் 30 ஆண்டுகால பழக்கம், நான் அவரை அதிக மதிக்கிறேன் அதே போல் தான் சைதை துரைசாமியும் அவர்கள் ரெண்டு பேரும் என்னை சந்தித்து பேசினார்கள் என்று தெரிவித்த டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் சந்திப்பு குறித்து கேட்டபோது அன்புமணி வந்தார் என்னை பார்த்தால் பேசினார் பேசிய விவரம் குறித்த பின்னர் தெரிவிக்கிறேன் என்று தெரிவித்த டாக்டர் ராமதாஸ் சென்னை புறப்பட்டு சென்றார்.