06/07/2026
அரசியல் தமிழ்நாடு

திமுகவில் அடுத்த மு.அமைச்சர் தலைமறைவா..?

  • July 6, 2026
  • 0

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனிடம் திமுகவைச் சேர்ந்த புரோக்கர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள்

திமுகவில் அடுத்த மு.அமைச்சர் தலைமறைவா..?

தூத்துக்குடி மாவட்டம், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதி தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணனிடம் திமுகவைச் சேர்ந்த புரோக்கர்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, திமுகவில் இணைய முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர்கள் பல கோடி ரூபாய் பேரம் பேசி, மிரட்டல் விடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் ஆதாரத்துடன் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

தமிழகத்தில் தமிழக வெற்றிக்கழக ஆட்சியில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து குதிரை பேரம் நடப்பதாக கூறி, அதிமுக, திமுக, பாரதிய ஜனதா கட்சி ஆகியோர் புகார் தெரிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஆளுநரிடம் மனு அளித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக வெற்றி கழக சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம் திமுகவினர் குதிரை பேரம் நடத்தியதாக வந்த புகாரை தொடர்ந்து காவல்துறையினர் சுமார் 10 பேரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜி சரவணன் ஏரலில் அமைந்துள்ள தனது அலுவலகத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதியில் தான் வெற்றி பெற்றதை தொடர்ந்து என்பது தொடர்ந்து அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அதிமுக மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் கூட்டு சேர்ந்து கொண்டு சமூக வலைதளங்கள் மூலம் தன் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தன்னை சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து விட்டு திமுகவில் சேர வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உதவியாளர்கள் என்ற போர்வையிலும் மேலும் திமுகவை சேர்ந்த புரோக்கர்கள் பெயரில் சென்னையில் சட்டமன்ற உறுப்பினர் விடுதியில் வைத்து தன்னை வந்து நேரடியாக பார்த்து உங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேல் தருகிறோம். சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நீங்கள் திமுகவுக்கு வந்து விடுங்கள். உங்களுக்கு அமைச்சர் பதவி தருகிறோம், என பேரம் பேசினர். மேலும் அவ்வாறு இல்லை என்றால் உங்களை என்ன செய்வோம் என்று தெரியாது எனவும் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் தனது வாகனத்தில் வரும்போது ஒரு லாரி மோதி விபத்துக்குள்ளானது. அதுவும் எனக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. தான் அவர்கள் மிரட்டலுக்கு பணியாத காரணத்தினால் என்னை கொலை செய்யும் நோக்கில் அந்த லாரியை ஏவி விட்டார்களா என தெரியவில்லை என தெரிவித்தார்.

மேலும் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கு மேற்பட்ட பகுதியில் திமுகவினர் அதிமுக வினர் பல்வேறு ஊழல் சம்பவங்களின் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் அதை தடுத்து மக்கள் பணியில் தான் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் தன்னை எப்படியாவது தடுக்க வேண்டும் என தொடர்ந்து திமுக அதிமுக கூட்டணி சேர்ந்து கொண்டு திமுக அ திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் பல்வேறு சமூகப் பணிகளை ஸ்ரீவைகுண்டம் தொகுதி மக்களுக்காக தான் செய்து வருவதாகவும் தொடர்ந்து நான் தமிழக வெற்றி கழகத்தில் தமிழக முதல்வர் விஜய் கூறியபடி தொடர்ந்து மக்கள் சேவையில் பணியாற்றுவேன் என தெரிவித்தார்.

ஸ்ரீவைகுண்டம் தமிழக வெற்றிக்கழக சட்டமன்ற உறுப்பினர் தன்னை திமுகவினர் திமுகவில் இணைய சொல்லி எதிர் பேரம் நடத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்து சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *