06/07/2026
அரசியல் இந்தியா தமிழ்நாடு

மேகதாது அணை… பொங்கி எழும் தமிழக பாஜக..!

  • July 6, 2026
  • 0

மேகதாது அணைக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு – விவசாயிகளின் உரிமைக் கோரிக்கைகளுக்கு தமிழக பாஜக தொடர்ந்து ஆதரவு: கே.பி. ராமலிங்கம்… சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில், சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பண்டித் தீனதயாள் உபாத்யாய பயிற்சி

மேகதாது அணை… பொங்கி எழும் தமிழக பாஜக..!

மேகதாது அணைக்கு தமிழக பாஜக கடும் எதிர்ப்பு – விவசாயிகளின் உரிமைக் கோரிக்கைகளுக்கு தமிழக பாஜக தொடர்ந்து ஆதரவு: கே.பி. ராமலிங்கம்…

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில், சேலம் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் பண்டித் தீனதயாள் உபாத்யாய பயிற்சி பேரியக்கமானது சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் அரிராமன் தலைமையில் நடைபெற்றது…

இந்த நிகழ்ச்சியில், பாஜக மாநில துணைத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.பி. ராமலிங்கம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பயிற்சி முகாமைத் தொடங்கி வைத்து, கட்சித் தொண்டர்களுக்கு பயிற்சி வழங்கி உரையாற்றினார்…

பின்னர் செய்தியாளர்களிடம் அவர், மேகதாது அணைத் திட்டம் குறித்து கூறியதாவது: மேகதாது அணை கட்டும் முயற்சியில் கர்நாடக அரசு நீண்ட காலமாக தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. ஆனால், இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்காது என்று ஏற்கனவே நாடாளுமன்றத்திலேயே தெளிவாக தெரிவித்துள்ளது.சுற்றுச்சூழல் அனுமதி பெற முயற்சி மேற்கொண்டாலும், அதனை எளிதில் வழங்க முடியாது என்பதையும் மத்திய அரசு கூறியுள்ளது…

அதையும் மீறி கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்தால், தமிழக பாஜக அதனை முழுமையாக எதிர்க்கும்.மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினால், அதில் பாஜக தனது கருத்துகளை பதிவு செய்யும்…

தமிழக அரசின் மேகதாது அணை எதிர்ப்பு நிலைப்பாட்டிற்கு தமிழக பாஜக முழுமையான ஆதரவை வழங்கும், என்றார்.தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் குறித்து பேசிய அவர், விவசாயிகளின் கோரிக்கையை நாங்களும் ஆதரிக்கிறோம். விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதே நியாயமான நடவடிக்கை. நிதிச் சுமையை காரணம் காட்டுவது ஏற்க முடியாது. விவசாயிகளின் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாக இருப்பதால், அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது அரசின் பொறுப்பு.விவசாயிகளின் உரிமைக் கோரிக்கைகளுக்கு தமிழக பாஜக தொடர்ந்து ஆதரவாக இருக்கும், என்று தெரிவித்தார்…

இந்த நிகழ்ச்சியில் சேலம் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சி.பி. ரவி ராஜசேகர், மகேஸ்வரி, மாநில செயற்குழு உறுப்பினர் சௌந்தர்ராஜன், மாவட்ட பொருளாளர் ரமேஷ் கார்த்திக், மாவட்ட துணைத் தலைவர் நடராஜன், மண்டலத் தலைவர் வடிவேலு உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *