தஞ்சையில் டெல்டா மண்டல இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தலைமையில் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி கே.வாசன்,
வட மாநிலத்தவரை தமிழகத்தில் வாக்காளராக சேர்க்க ஜனநாயகத்தில் வாய்ப்பு இருந்தால் அவர்களை நீக்க முடியாது அதற்கென்று சட்டம் உள்ளது முறையுள்ளது அதனை கண்காணிக்க தேர்தல் ஆணையம் உள்ளது எதிர்க்கட்சிக்கு ஏன் தோல்வி பயத்தில் இந்த சந்தேகம் வருகிறது. தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் தேர்தல் ஆணையத்தின் மீது குற்றம் சுமத்துகின்றனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி எத்தனை இடத்தில் போட்டியிடும் என கேட்ட கேள்விக்கு தங்களது கூட்டணி மேலும் வழுபெறும் என நம்புகிறோம் அதற்கு என நேரம் காலம் இருக்கிறது. தமாகா எந்த கூட்டணியில் இருந்தாலும் எடுத்துக்காட்டான கட்சியாகவே இருந்து வருகிறது. தமாகா கூட்டணிகளை சேர்க்கக்கூடிய கட்சி பிரிக்கக்கூடிய கட்சி அல்ல.
மத்தியில் மோடி தலைமையிலான அரசு நிர்மலா சீதாராமன் போன்றோர் வறுமை ஒழிப்பு குறைப்பதிலே முதன்மை நாடாக உள்ளது. பொருளாதாரம் வளர்ச்சியில் உலகிலேயே மூன்றாவது நாடாக ஏற்படுத்தி இருக்கிறார்கள் என்பதை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் சட்டம் ஒழுங்கு மிக மிக மோசமாக உள்ளது அதிமுக அரசை ஒப்பிட்டு பார்க்கையில் நாள்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு பாலியல் என நடைபெற்று கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.