31/05/2026
News இந்தியா

உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் அரசு மருத்துவமனையிலும் கிடைக்க வேண்டும் – முதலமைச்சர் ரங்கசாமி

  • June 16, 2025
  • 0

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் புதிய 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி, 128 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேன் கருவி, டிஜிட்டல் மேமோகிராம், மாலிக்குலர் டயக்னாஸ்டிக் லேப், திறப்பு விழா இன்று

உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் அரசு மருத்துவமனையிலும் கிடைக்க வேண்டும் – முதலமைச்சர் ரங்கசாமி

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் பட்ட மேற்படிப்பு நிறுவனத்தில் புதிய 1.5 டெஸ்லா எம்.ஆர்.ஐ ஸ்கேன் கருவி, 128 ஸ்லைஸ் சி.டி.ஸ்கேன் கருவி, டிஜிட்டல் மேமோகிராம், மாலிக்குலர் டயக்னாஸ்டிக் லேப், திறப்பு விழா இன்று நடைபெற்றது.

திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக துனை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்,
முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டு அனைத்துக் கருவிகளையும் திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாசநாதன்..

சுகாதாரத்துறைக்கு ஆண்டுதோறும் பல கோடி ரூபாய் செலவு செய்து வருவதாகவும், உயர்தரமான மருத்துவ சேவைகளை ஏழை எளிய மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ரங்கசாமி…

தனியார் மருத்துவமனையில் உயர்தரமான சிகிச்சைகள் பெற பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது,ஆனால் ஏழை எளிய மக்களால் இது முடியாத ஒன்று, ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் அரசு மருத்துவமனையின் தரத்தை உயர்த்தி தனியார் மருத்துவமனைகளில் கிடைக்கக்கூடிய உயர்தரமான சிறப்பு சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலும் கிடைக்க வேண்டும் என்பதுதான் அரசின் எண்ணம் என்று குறிப்பிட்டார். மேலும் அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள டெக்னீசியன் செவிலியர்கள் மருத்துவர்கள் காலியிடங்கள் விரைவாக நிரப்பப்பட உள்ளது என்றார்.

இவ்விழாவில் சபாநாயகர் செல்வம் நாராயணன், தலைமைச் செயலர் சரத்சவுகான், நலவழித்துறை செயலர் ஜெயந்தகுமார் உள்ளிட்ட மருத்துவர்கள் அதிகாரிகள் பொதுமக்கள் என திரளாக கலந்து,கொண்டனர்.