பிரபல கட்டுமான நிறுவனங்களின் பெயரில் இணைய வழியில் 50 கோடி ரூபாய் மோசடி செய்து 7 ஆண்டுகளாக 14 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டிய பீகார் இணைய வழி மோசடி கும்பலை புதுச்சேரி போலீசார் பொறி வைத்து பிடித்தனர்
கட்டுமான பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களைப் போல் பேஸ்புக்கில் விளம்பரம் செய்து இந்தியா முழுவதும் பல கோடி ரூபாய்க்கு மேல் இணைய வழி கும்பல் மோசடி வேலையில் ஈடுபட்டு வந்தது.
இந்த விளம்பரங்களை நம்பிய புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தைச் சேர்ந்த சேதுராமன் என்பவர், கம்பிகள், சிமெண்ட் ,இரும்பு சீட்டு, கேட்டு மோசடிக்காரர்கள் கொடுத்த வங்கி கணக்கில் 30 லட்சத்து 97 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
ஆனால் அவர்கள் குறிப்பிட்டது போன்று சிமென்ட், கம்பியோ வந்து இவருக்கு வந்து சேரவில்லை, மேலும் அவர்களின் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் இணைய வழி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் புதுச்சேரி இணைய வழி போலீசார் தனிப்படை அமைத்து மத்திய பிரதேசம், ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் தேடி வந்தனர்,
ஆனால் அவர்கள் இறுதியாக பீகார் தலைநகர் பாட்னாவில் அடுக்குமாடி குடியிருப்பில் இருப்பது தெரிய வந்தது இதனை அடுத்து அங்கு சென்ற போலீசார் இணைவழி மோசடி கும்பல் ஐந்து பேரை சுற்றி வளைத்து கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தியதில்..
பீகாரைச் சேர்ந்த ராகுல்குமார் சிங், உத்தம் விஷால் குமார், ராயுசன் குமார், அபிஷேக்குமார், தயானந்த் என்பதும் இவர்கள் மீது 14 மாநிலங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதும் தெரியவந்தது,
மேலும் இவர்கள் மோசடி செய்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததும் தெரிய வந்தது அது மட்டுமல்லாமல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்ததால் இவர்களை கைது செய்வது என்பது கடினமாக இருந்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
மேலும் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து இவர்கள் மீது 52 புகார்கள் இருப்பதும் இவர்களின் தலைமையில் பல்வேறு குழுக்கள் செயல்படுதும் மேலும் 14 மாநிலங்களில் உள்ள பல்வேறு கட்டுமான நிறுவன உரிமையாளர்களிடம் கோடி கணக்கில் பண மோசடி செய்து இருப்பதும் தெரிந்தது.
இதனை அடுத்து இவர்களிடமிருந்து 35 லட்ச ரூபாய் பணம் 40க்கும் மேற்பட்ட மொபைல் போன், லேப்டாப் டேப் சொகுசு கார் போன்றவற்றை பறிமுதல் செய்த இனை வழி போலிசார் அவர்களை நீதிமன்றம் முன்பு ஆஜர்ப்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.