News தமிழ்நாடு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

  • July 2, 2024
  • 0

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு

மறையாத சோகம்… கள்ளச்சாராயத்துடன் கெத்தாக சுற்றி திரிந்த குடிமகன்

கள்ளக்குறிச்சியில் சாராயத்தால் உயிரிழந்த சோகம் மறையாத நிலையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட் உடன் சுற்றி வந்த குடிமகனின் செயல் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் செங்கல்பட்டில் கடந்த ஆண்டு மே மாதம் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்ததில் 14 பேரும், செங்கல்பட்டில் 8 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்திற்கு பிறகும் கலாச்சாராயம் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு அஜாகிரதையாகவும் மெத்தனமாகவும் செயல்பட்டதன் விளைவு கள்ளக்குறிச்சி கர்ணாபுரம் பகுதியில் சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் இதுவரை 65க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதன் பிறகு தமிழக அரசு விழித்துக் கொண்டு கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மதுவிலக்கு சட்ட திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேற்றியுள்ளது.

இந்நிலையில் இன்று காலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் சாராய பாக்கெட்டுடன் ஒருவர் அனைத்து பயணிகளையும் அச்சுறுத்தும் வகையில் பேசிக்கொண்டு சுற்றி வந்தார்.

பின்னர் பேருந்து நிறுத்தும் இடத்தில் சாவகாசமாக அமர்ந்து சாராய பாக்கெட்டை கிழித்து தண்ணீர் கலந்து குடித்தார் இதனை அங்கிருந்த பயணிகள் மற்றும் பொதுமக்கள் வேதனையுடன் பார்த்தனர். சாராயம் குடித்து இத்தனை பேர் உயிரிழந்த நிலையிலும் சாராய பாக்கெட்டுடன் ஒருவர் சுற்றி திரிந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.