News அரசியல் உலகம்

இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்..!

  • August 2, 2024
  • 0

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் மீது லெபனான் ஹமாஸ் படையினர் ராக்கெட் மழை பொழிந்தன. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய

இஸ்ரேல் மீது ராக்கெட் மழை பொழிந்த ஹமாஸ்..!

இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி கொலை செய்யப்பட்டார். இதற்கு பழி தீர்க்கும் விதமாக இஸ்ரேல் மீது லெபனான் ஹமாஸ் படையினர் ராக்கெட் மழை பொழிந்தன.


இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கிய போர் இன்னமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் இதுவரை 39 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை இஸ்ரேல் படைகள் படுகொலை செய்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஈரான், இதற்கு பழி தீர்க்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் இஸ்ரேல் மீது நேரடி தாக்குதல் நடத்தவும் ஈரான் அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் ராணுவ தளபதி ஃபுவாட் ஷுக்ரையும் இஸ்ரேல் படைகள் கொலை செய்துள்ளன. இதனை தொடர்ந்து, பழிவாங்கும் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இஸ்ரேல், ஈரான், ஹிஸ்புல்லா இடையே ஏற்பட்டுள்ள மோதலால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.