தமிழ்நாடு

நீட் தேர்வு தொடர்பாக விஜயின் பேச்சு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது – செல்வப்பெருந்தகை

  • July 4, 2024
  • 0

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழப்பட்டு, அகரம், சித்தாமூர், ஆரியூர், வெங்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

நீட் தேர்வு தொடர்பாக விஜயின் பேச்சு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது  – செல்வப்பெருந்தகை

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை. அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வாழப்பட்டு, அகரம், சித்தாமூர், ஆரியூர், வெங்கந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை,

நாடாளுமன்றத் தேர்தலில் எப்படி நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி வாய்ப்பை அளித்தார்களோ அதே போல இந்த இடைத்தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் அன்னியூர் சிவா அவர்கள் 75 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். எதிரே உள்ள வேட்பாளர் எதை வைத்து வாக்கு கேட்கப் போகிறார் என்பது தான் கேள்வி. சமூக நீதிக்கும், இடஒதுக்கீட்டுக்கும் ஒத்துவராத பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளார்கள்.

தேர்தலில் போட்டியிட்டால் மிகப்பெரிய தோல்வியை தழுவுவோம் என்று இன்னொரு கட்சி தேர்தல் களத்தில் இருந்து விலகியுள்ளது. ஆனால் மக்கள் திமுகவுக்கு ஆதரிக்கிறார்கள் காரணம் மூன்று ஆண்டுகள் வெற்றிகரமாக நல்லாட்சி நடைபெற்று வருகிறது.

சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து தரப்பு மக்களும் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். இது வித்தியாசமான இடைத்தேர்தல். திமுக நீட் பிரச்சினையை தொடர்ந்து பேசி வருகிறார்கள். நீட் தேர்வு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.

கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் நீட் விரோதமானது. பணக்கார மாணவர்களுக்கு தான் நீட் ஆதரவானது என ராகுல் காந்தி போராடி வருகிறார். நீட் தேர்வு தொடர்பாக தவெக தலைவர் விஜயின் பேச்சு வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது என்றார்