தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜயை அவதூறாக பேசிய உதயநிதி ஸ்டாலினை கண்டித்து தமிழக வெற்றி கழகத்தினர் திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக எதிர் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பற்றி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இன்று கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தினர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் ஒரு தொடர்ச்சியாக திருச்செந்தூர் பகத்சிங் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயலாளர் பிரைட்டர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் உதடு கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது கையில் கண்டன கோஷ பதாகைவுடன் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் உட்பட சுமார் 200 பேர் கலந்து கொண்டனர்.