முன்னாள் பாஜக நமது PEN POINT தளத்தின் பின்னூட்டங்களிலும் தனிச் செய்திகளிலும் அண்ணாமலை தனிக்கட்சி தொடங்கப் போகிறாராமே உண்மை என்ன என்று நம் நேயர்கள் கேட்கின்றனர். ஆனால், அனுமானங்களின் அடிப்படையில் செய்திகள் வெளியிட மாட்டோம் என்பது நம் தளத்தின் கொள்கைகளுள் ஒன்று. அதிகாரப்பூர்வமாக செய்தி வரட்டும். அதற்குள் எந்த அவசரமும் இல்லை.
அத்துடன், நீங்கள் கேட்ட இந்தத் தகவலை 100% உறுதி செய்ய நம் குழு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் நாம், ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் அண்ணாமலை அவர்களைத் தொடர்பு கொண்டு, அவரே உறுதிபடக் கூறினால் ஒழிய, இந்த விவகாரத்தில் யார் சொன்னாலும் அது அதிகாரப்பூர்வமற்ற தகவல் தான். இதற்காக கடந்த இரண்டு நாட்களாக அவரைத் தொடர்பு கொள்ள முயற்சித்து வருகிறோம். பதில் இல்லை. நம் தளத்தின் Fairness policyஇன் அடிப்படையில் 48 மணிநேர அவகாசத்துக்குப் பிறகே இச்செய்தி வெளியிடப்படுகிறது. இனி பதில் கிடைத்தால், அதனையும் இதே கட்டுரையில் வெளியிடுவோம்.
வாசகர்களுக்காக
தனிக்கட்சி தொடங்குவதை நாம் விசாரித்தவரையில் அனைவரும் உறுதி செய்தனர். ஆனால், கட்சியின் பெயர் MSK (மக்கள் சக்தி கழகம், மக்கள் சேவைக் கழகம்), BMK (பாரதிய மக்கள் கழகம்) என்று பரவும் செய்திகளில் எந்த விதமான உண்மையும் இல்லை.
தனிக்கட்சி குறித்த செய்திகள் உண்மையில்லை என்று அவர் ஒருவேளை மறுத்தால், இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று அவர் சொல்வதுதான் உண்மையாக இருக்கும். அல்லது அறிவிப்பு வரும் வரை வெளியில் தெரிய வேண்டாம் என்று நினைக்கலாம். எதுவாக இருந்தாலும், அவர் கருத்தை ஏற்க வேண்டும். ஜனநாயகத்தில் தனிக்கட்சி தொடங்குதல் என்பது தனிப்பட்ட முடிவு. இதன் மீது இயல்பான ஆர்வமும் மக்களுக்கு எழும். ஆனால், அதைப் பயன்படுத்தி தொடர் செய்திகளை அனுமானங்களின் அடிப்படையில் வெளியிடக்கூடாது என்று முடிவெடுத்துள்ளது PEN POINT.
2019 ஆம் ஆண்டு அனைத்திந்திய மக்கள் சேவைக் கழகம் என்ற பெயரில் நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கவிருந்ததும் பின்னர் மக்கள் சேவைக் கழகம் என்று தேர்தல் ஆனையம் பெயர் மாற்றியதும் உண்டு. அந்தப் பெயரைத்தான் தற்போது இணைத்துப் பேசி வருகின்றனர். இதற்கும் அண்ணாமலை தொடங்கவிருப்பதாக சொல்லப்படும் கட்சிக்கும் தொடர்பு என்பதில் அதிகாரப்பூர்வ உண்மை இல்லை.
‘அண்ணாமலையின் தனிக்கட்சி’ என்று பரவும் விவகாரத்தில் நம் நிலைப்பாடு, “பொறுத்திருப்போம். அவசரம் வேண்டாம்” என்பதே. முறையான தகவல்கள் நமக்கு உறுதியாகும் வரை செய்திகள் வெளியிட மாட்டோம். வாசகர்களின் புரிதலுக்கு நன்றி.
எங்கள் செய்தியாள்கை என்பது அவசர அவசரமாக உங்களை எதையாவது நினைக்க வைப்பது அல்ல. எது உண்மையோ அதைத் தந்து, உங்களை உண்மைகளோடு வைத்திருத்தல் தான்.