31/05/2026
News அரசியல் தமிழ்நாடு

”பூ முடித்தவனை புறந்தள்ளி” – IUML விசிகவை கடுமையாக பேசிய ஆ.ராசா

  • May 22, 2026
  • 0

2026 சட்டமன்றத் தேர்தலில், Tamilaga Vettri Kazhagam தலைமையிலான ஆட்சிக்கு Viduthalai Chiruthaigal Katchi ஆதரவு வழங்கியது. ஆரம்பத்தில் “நிபந்தனையற்ற ஆதரவு” என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அமைச்சரவையிலும் பங்கேற்க உள்ளதாக விசிக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த, அமைச்சரவையில்

”பூ முடித்தவனை புறந்தள்ளி” – IUML விசிகவை கடுமையாக பேசிய ஆ.ராசா

2026 சட்டமன்றத் தேர்தலில், Tamilaga Vettri Kazhagam தலைமையிலான ஆட்சிக்கு Viduthalai Chiruthaigal Katchi ஆதரவு வழங்கியது. ஆரம்பத்தில் “நிபந்தனையற்ற ஆதரவு” என தெரிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் அமைச்சரவையிலும் பங்கேற்க உள்ளதாக விசிக தரப்பில் அறிவிக்கப்பட்டது. இந்த, அமைச்சரவையில் விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஏணி சின்னத்தில் போட்டியிட்ட ஐயூஎம்எல் கட்சியும் இதே போல அமைச்சரவையில் இடம்பெறுகிறது.

இந்த அரசியல் சூழலின் நடுவில், திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா காட்டமாகவும் சர்ச்சையாகவும் பதிவு ஒன்றை வெளியிட்டார். https://twitter.com/i/status/2057518283260408009


அந்த பதிவில்,
“முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை
நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்;
பூமுடித்தவனை புறந்தள்ளி
புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை!
பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’த்திற்கு காத்திருப்போம்;
என்றாலும் களமாடுவோம்!” என்று தெரிவித்தார்.

இது எதிர்ப்பைக் கிளப்பவே, இந்தப் பதிவையும் நீக்கிவிட்டார். அதைத் தொடர்ந்து, புதிதாக ஒரு அதிவை வெளியிட்ட்டார்.

அதிலும், “என் வீட்டுத் தோட்டத்துத்
தென்னை
கூனி வளைந்து
எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால்
இலக்கியத்தில் அதற்குப் பெயர்
‘முடத்தெங்கு’!
அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?
வாழ்க தமிழ்!” என்று பதிவிட்டிருந்தார்.

பூ முடித்தவனை புறந்தள்ளி புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதா?” என்ற தொனியில் ஆ.ராசா வெளியிட்ட ட்வீட்… விசிகவுக்கும் ஆ.ராசாவுக்கும் என்னதான் பிரச்சினை?

இது ஆ.ராசா அவர்களின் கருத்தா இல்லை திமுகவின் கருத்தா என்ற கேள்விக்கு இன்னும் பதிலில்லை. ஆனால் ஆ.ராசாவுக்கும் விசிகவுக்கும் மோதல் போக்கு என்பது புதிதல்ல. ஏற்கனவே ஆ.ராசாவை ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என்று சொல்லுமளவுக்கு விசிக தொண்டர்கள் ஆ.ராசா மீது அதிருதியில் இருந்ததுண்டு.

முன்பே, விசிக தலைவர் திருமாவளவனை ஒரு, சாதிக்கட்சித் தலைவர் என்று பேசியதற்காக விசிக தொண்டர்களால் ஆர்.எஸ்.எஸ். கைக்கூலி என்று மிகக்கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

இவரை எதிர்த்து பல்வேறு மாவட்டத் தலைநகரங்களில் விசிக போரட்டமே நடத்தியது. அத்தனையும் கூட்டணிக்குள் இருந்தபோதே நடந்தவைதான்.

இந்நிலையில், தற்போது ஆதரவு, அமைச்சரவை உள்ளிட்ட விவகாரங்களிலும் விசிக, IUML ஆகிய கூட்டணிக் கட்சியை தரக்குரைவாகப் பேசியது அரசியல் களத்தில் வாதப் பிரதிவாதங்களாக மாறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *