News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் இந்தியா தலையங்கம்

தலையங்கம்: மகளிர் இட ஒதுக்கீடு – நஞ்சில் விழுந்த தேன்

  • April 17, 2026
  • 0

இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.

தலையங்கம்: மகளிர் இட ஒதுக்கீடு – நஞ்சில் விழுந்த தேன்

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டுள்ள தொகுதி மறு சீரமைப்பு மசோதா 2026 ஐ எதிர்க்க வேண்டியது அடிப்படை கடமைகளுள் ஒன்றாகிறது. அதே சமயம் அதற்குள் மகளிர் இடஒதுக்கீட்டை வைத்து விளையாடுகிறது இந்திய அரசு. இந்த சமயத்தில் நமக்கு வேண்டிய புரிதல் என்ன? எதை ஏற்பது எதை எதிர்ப்பது?

இந்தியா இந்தியாவாகவே இருப்பதை இந்துத்துவம் ஒருபோதும் விரும்பியதில்லை. அந்த வரிசையில் ஏவப்பட்ட கணைகளை ஒவ்வொன்றாக எதிர்த்து அடிபட்டும் தற்காத்தும் ஆட்சி செய்து வருகின்றன தென் மாநிலங்கள்.

வளர்கிறது தேய்கிறது என்று வாசகங்களை தாண்டி, வட மாநிலங்களை விட இந்தியாவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை தென் மாநிலங்கள் பதிவு செய்துள்ளன என்பது வெள்ளிடைமலை. அவற்றுள் கேரளமும் தமிழ்நாடும் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்குறியீட்டில் முதன்மையான இடம்பெற்ற மாநிலங்கள்.

இதற்கு அடிப்படை காரணமாக பல்வேறு நீண்ட காலத் திட்டங்கள் உள்ளன. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியது, பிறப்பு விகிதத்தை தொடர்ந்து கண்காணித்து நெறிப்படுத்தியது, குழந்தைகள் இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியது, கல்வியை குறிப்பாக பெண்கல்வியை ஊக்குவித்தது, எந்தவொரு திட்டத்தையும் கல்வி சார் வளர்ச்சிக்கு அடித்தளமாக பயன்படுத்தியது என பட்டியலிடலாம். இன்றும் இந்த இரு மாநிலங்களும் இந்த அடிப்படையில் இருந்து நகரவில்லை. காரணம், கட்டாயம் அல்ல. மாநில அரசுகளின் மனநிலை.

ஆனால், இந்த வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் தண்டனை அளிக்கும் விதமாக, நாடாளுமன்ற தொகுதிகளை தென் மாநிலங்களுக்கு குறைத்து வடமாநிலங்களுக்கு குறிப்பாக இந்தி மாநிலங்களுக்கு அதிகரிக்கும் விதமாக அரசியலமைப்பில் சட்டத்திருத்தம் கொண்டுவர முயற்சிகிறது இந்திய பாஜக அரசு.

தொகுதிகள் அதிகரிக்குமே தவிர, குறையாது என்று பாஜகவினர் தொடர்ந்து பேசி வருகின்றனர். ஆனால், விகிதாசார அடிப்படையில் அப்படியே தொடர்வது வேறு, மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை மாற்றியமைப்பது வேறு. இந்த மசோதாவில் சொல்லப்பட்டுள்ளது மக்கள் தொகை அடிப்படையிலானது தான்.

தமிழ்நாடு பாஜக தரப்பில் அண்ணாமலை என்பவர் பேசும்போது 1971 மக்கள் தொகை கணக்கின்படி தான், இந்தமுறை மறுசீரமைப்பும் நடக்கும் என்று சொன்னார். ஆனால், வாய்வார்த்தையாக என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். உண்மை வேறாக இருக்கிறது அந்த மசோதாவில், அண்மையில் வெளிவந்த மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி தான் தொகுதி மறுசீரமைப்பு நடக்கும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறது.

அப்படியானால், அண்ணாமலை சொன்னது பொய்யா என்றெல்லாம் சிந்திக்க வேண்டியதில்லை. ஆம், அது வழக்கம்போல பொய்தான்.இதைத்தான் Pen Point News கடுமையாக எதிர்க்கிறது. மகளிர் இட ஒதுக்கீட்டை அல்ல.

மகளிர் இட ஒதுக்கீடு அத்தியாவசியமானது அந்த முடிவை 2023 ஆம் வெளிவந்த மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா வடிவிலேயே ஆதரிக்கிறோம். இந்த தொகுதி மறுசீரமைப்பின் தொகுப்புக்குள் வரும் மகளிர் இட ஒதுக்கீடு, விஷத்துக்குள் விழுந்த அமிர்தம் தான்.

தொகுதிகளை அதிகரிப்போம். அதன் பிறகே பெண்களுக்கு இடமளிப்போம் என்றால், இப்போதிருக்கும் எம்பிக்களில் ஒருவர் கூட தன் பதவி போவதை ஏற்கவில்லை என்றுதான் பொருள். 543 இல் 33% கணக்கிடுவதில் சிக்கலா? இல்லை 543 என்ற கணக்கே சிக்கலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *