31/05/2026
News இந்தியா

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் இல்லை – முதலமைச்சர் ரங்கசாமி

  • June 30, 2025
  • 0

நியமன எம்எல்ஏ பதவி வழங்காதது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தமும் இல்லை,அதிருப்தியும் இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார் புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தரவு தளம் மற்றும் மேற்பார்வை மற்றும்

என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தம் இல்லை – முதலமைச்சர் ரங்கசாமி

நியமன எம்எல்ஏ பதவி வழங்காதது என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வருத்தமும் இல்லை,அதிருப்தியும் இல்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்தார்

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பற்றிய தரவு தளம் மற்றும் மேற்பார்வை மற்றும் மேலாண்மை திறன்கள் கொண்ட வித்யா சமிக்‌ஷ கேந்திரா எனப்படும் பல்நோக்கு மையம் புதுச்சேரி பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவிற்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். தொடர்ந்து இதன் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.

விழாவில் சட்டப்பேரவை தலைவர் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, சமக்ர சிக்‌ஷா மாநில திட்ட இயக்குனர் எழில் கல்பனா உள்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

வித்யா சமிக்ஷா கேந்திரா என்பது தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட மையப்படுத்தப்பட்ட தரவுத்தள கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்வு தளமாகும். இதன் நோக்கம் தரவுகளின் அடிப்படையில் கல்வி நிர்வாகத்தை மேம்படுத்துவது மற்றும் மாணவர்களின் கற்றல் விளைவுகளை மேம்படுத்துவது ஆகும்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ரங்கசாமி…

புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வித்யா சமிக்‌ஷ கேந்திரா எனும் பள்ளிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் பற்றிய தரவு தளம் மற்றும் மேற்பார்வை மேலாண்மை திறன் கொண்ட பல்நோக்கு மையத்தை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் திறந்து வைத்தார்.