31/05/2026
News இந்தியா

பிஜேபி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் 3 ராஜினாமா – அமைச்சர் சாய். சரவணகுமார்

  • June 27, 2025
  • 0

பிரதமரின் உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் சாய். சரவணகுமார் பேட்டி புதுச்சேரியில் பிஜேபி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் 3 ராஜினாமா செய்து உள்ள நிலையில் அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தது பரபரப்பை

பிஜேபி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் 3 ராஜினாமா – அமைச்சர் சாய். சரவணகுமார்

பிரதமரின் உத்தரவின் பேரில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அமைச்சர் சாய். சரவணகுமார் பேட்டி

புதுச்சேரியில் பிஜேபி எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் 3 ராஜினாமா செய்து உள்ள நிலையில் அமைச்சர் சாய் சரவணன் குமார் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்துள்ளது

2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் புதுச்சேரி பிஜேபியில் பல்வேறு அதிரடி மாற்றங்களை கட்சி மேலிடம் செய்து வருகிறது.

அந்த வகையில் புதுச்சேரி பிஜேபி தலைவரை மாற்றிவிட்டு புதிய தலைவரை நியமிப்பது, தேர்தல் நேரத்தில் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கி கௌரவிப்பது என பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது.

இந்த நிலையில் புதுச்சேரிக்கு வருகை புரிந்த மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, கட்சி அலுவலகத்தில் பிஜேபி தலைவர் செல்வகணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், மற்றும் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் வி.பி. ராமலிங்கம், அசோக் பாபு, மற்றும் வெங்கடேசன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

நீண்ட நேர ஆலோசனைக்கு பிறகு நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மூன்று பேரும் சபாநாயகர் செல்வத்தை சந்தித்து தங்களது ‌ராஜினாமா கடிதத்தை அளித்தனர். ஆனால், அவர்களது ராஜினாமா ஏற்கப்பட்டதா என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

இந்த நிலையில் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி சந்தித்த பிஜேபி தலைவர் செல்வ கணபதி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், சபாநாயகர் செல்வம், ஆகியோர் ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் என். ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நியமன சட்டமன்ற உறுப்பினர் பதவி வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் சந்தித்த அமைச்சர் சாய் சரவணன் குமார் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

இதுகுறித்து அவர் கூறும் போது
பிரதமர் மோடி உத்தரவிட்டதன் பேரிலே தனது பதவியை ராஜினாமா செய்து உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.