01/09/2026
News அரசியல்

மினி பஸ் திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைப்பு..!

  • June 16, 2025
  • 0

ராமநாதபுரத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவில் 35 புதிய வழித்தடங்களில் 51 மினி பேருந்துகளை தனியார்கள் இயக்குவதற்கான ஆணையை வழங்கி மாநில

மினி பஸ் திட்டத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன் துவக்கி வைப்பு..!

ராமநாதபுரத்தில் புதிய விரிவான மினி பஸ் திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்தில் நடைபெற்ற இவ் விழாவில் 35 புதிய வழித்தடங்களில் 51 மினி பேருந்துகளை தனியார்கள் இயக்குவதற்கான ஆணையை வழங்கி மாநில வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பேருந்துகளை துவக்கி வைத்தார்

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம், ராமநாதபுரம் நகர் மன்ற தலைவர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் பயன் பெறும் வகையில் இந்த புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. 25 கிலோ மீட்டர் வரை வரை இயங்கும் இப்பேருந்துகள் இதுவரை பேருந்து போக்குவரத்து இல்லாத கிராம மக்கள் பயன்பெறுவர் எனவும் கூறினார்.