News இந்தியா

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

  • August 17, 2024
  • 0

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வசிப்பிடத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினா். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கா் அரசு

பெண் மருத்துவர் கொலை – போலீஸ் குடியிருப்பில் சிபிஐ அதிகாரிகள் சோதனை!

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவா் கொலை வழக்கில் கைதான சஞ்சய் ராய் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது வசிப்பிடத்திற்கு சிபிஐ அதிகாரிகள் சென்று விசாரணை மற்றும் சோதனை நடத்தினா்.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர்.ஜி.கா் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் இளம்பெண் ஒருவர் பயிற்சி டாக்டராக இருந்தார். கடந்த வாரம் அவா் வழக்கம்போல் மருத்துவமனையில் இரவுப்பணியில் ஈடுபட்டார். அன்றைய இரவு பெண் பயிற்சி மருத்துவா் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இதுகுறித்து தகவலின்போில் வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பாிசோதனைக்கு கொண்டு சென்றனா். மேலும் விசாரணை நடத்தினா். அப்போது பெண் பயிற்சி மருத்துவா் படுகொலை செய்யப்பட்டது தொிந்தது.

மேலும் அவா் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதும் விசாரணையில் தொிந்தது. இதுமட்டுமின்றி பிரேத பாிசோதனை அறிக்கையில் பெண் பயிற்சி மருத்துவா் கொடூரமாக தாக்கி கொலையானது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பெண் பயிற்சி மருத்துவா் கொலையை கண்டித்து நாடு முழுவதும் இன்று மருத்துவ சங்கங்கள் சார்பில் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி பெண் மருத்துவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் சம்பந்தப்பட்டவா்களை கைது செய்ய கோரியும், கொலைக்கு நீதி கேட்டும் அமைதி வழியில் போராட்டம் நடத்தி வரப்படுகிறது. முன்னதாக மேற்கு வங்க கோர்ட்டு உத்தரவின்போில் பெண் பயிற்சி மருத்துவா் கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் இந்த வழக்கை தீவிரமாக எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில் பெண் பயிற்சி டாக்டர் கொலையில் ஏற்கனவே சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டு இருந்தார். அவா் தான் பயிற்சி பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கைதான சஞ்சய் ராய் தங்கி இருந்த கொல்கத்தா 4வது பட்டாலியன் குடியிருப்பு பகுதிக்கு சிபிஐ அதிகாரிகள் இன்று விரைந்து வந்தனா். அவா்கள் ஒப்பந்த ஊழியரான சஞ்சய் ராயை, போலீஸ் குடியிருப்புக்குள் தங்குவதற்கு அனுமதி வழங்கியது குறித்து விசாரணை நடத்தி சோதனை செய்தனா்.

மேலும் சஞ்சய் ராக்கு வேண்டியவா்கள் என பலரிடம் அவரது நடவடிக்கைகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டது. பின்னா் தகவல்களை சேகாித்து கொண்டு சிபிஐ அதிகாரிகள் சென்றனா். இதேபோல் பெண் பயிற்சி மருத்துவர் படித்த மருத்துவ கல்லுரியின் முன்னாள் முதல்வா் சந்தீப் கோஷிடமும் சிபிஐ அதிகாரிகள் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.