வாஷிங்டன்: க்ரவுட் ஸ்டிரைக்கின் ஒரு சின்ன தவறான அப்டேட் காரணமாக வெள்ளிக்கிழமை உலகெங்கும் உள்ள மைக்ரோசாப்ட் விண்டோஸ் முடங்கின. இதனால் உலகெங்கும் விமானச் சேவை தொடங்கி பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே இந்த செயலிழப்பு குறித்த கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்க முடியாமல் க்ரவுட் ஸ்டிரைக் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் திணறிப் போனார். இது குறித்த வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை உலகெங்கும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் அடுத்தடுத்து முடங்கின. இதனால் உலகெங்கும் பல சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையே க்ரவுட் ஸ்டிரைக் நிறுவனத்தின் சிஇஓ ஜார்ஜ் கர்ட்ஸ் பிரபல செய்தி நிறுவனத்திற்கு ஒன்றுக்கு இது தொடர்பாகப் பேட்டியளித்தார்.
அப்போது நெறியாளர் கேட்ட ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு அவர் பதிலளிக்கத் திக்கித் திணறிப் போனார். இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
கேள்வி: அமெரிக்காவில் உள்ள என்பிசி டுடே டிவிக்கு இந்த விண்டோஸ் செயலிழப்பு தொடர்பாக கார்ஜ் கர்ட்ஸ் பேட்டியளித்தார். அப்போது செய்தியாளர், இவ்வளவு பெரிய தோல்வியை எப்படி ஒரே ஒரு அப்டேட் ஏற்படுத்தும் என்று கேள்வி எழுப்பினர்.
அதற்கு உடனடியாக பதில் அளிக்காத குர்ட்ஸ் சில நிமிடங்கள் வரை பேசாமல் இருந்தார். அப்போது அவர் பதற்றமடைந்தது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. மேலும், தெளிவான விளக்கத்தைத் தராமல் சும்மா 2 வரியில் ஏதோ சொல்லி இருக்கிறார்.