அரசியல் தமிழ்நாடு

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?

  • September 11, 2024
  • 0

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா? தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின்

வி.சி.க-வின் மதுவிலக்கு மாநாடு தி.மு.க கூட்டணிக்கு நெருக்கடி தருமா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கைக் கொண்டுவர வலியுறுத்தி மாநாடு ஒன்றை நடத்தப்போவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (வி.சி.க) அறிவித்துள்ளது. இது தி.மு.க. கூட்டணிக்கும், மாநில அரசுக்கும் நெருக்கடி அளிக்கும் முயற்சியா?

தமிழ்நாட்டில் மதுவிலக்கை வலியுறுத்தி வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அக்கட்சியின் மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் ‘மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு’ ஒன்றை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்தப்போவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக, செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 10) சென்னையில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றபோது, அதில் பேசிய அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், “மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும்,” என்றார். இந்த மாநாட்டில் அனைத்துக் கட்சிகளும் பங்கேற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதையடுத்து, அ.தி.மு.க-வும் இந்த மாநாட்டில் பங்கேற்கலாமா எனச் செய்தியாளர்கள் கேட்டபோது, “மது ஒழிப்பில் அ.தி.மு.க-வும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்தக் கட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்துக் கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது. இதைத் தேர்தலோடு பொருத்திப் பார்க்க வேண்டியதில்லை,” என்று தெரிவித்தார்.