News அரசியல் இந்தியா தமிழ்நாடு

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

  • July 30, 2024
  • 0

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள்

பட்ஜெட் – தமிழ்நாடு புறக்கணிப்பா? நிர்மலா வேதனை!

பட்ஜெட் குறித்து தவறான புரிதலோடு கருத்து தெரிவிப்பது தனக்கு வருத்தத்தை தந்துள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மக்களவையில் ஜூலை 23ஆம் தேதி 2024- 25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமன் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை மோடி அரசு புறக்கணித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக அரசை தாங்கி பிடிக்கும் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு என்ற பெயர் கூட பட்ஜெட்டில் இல்லை என்று முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டினார். பட்ஜெட் குறித்த விமர்சனங்களை எதிர்கட்சிகள் மக்களவையில் முன்வைத்த நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், “ஒரு மாநிலத்தின் பெயர் பட்ஜெட் உரையில் இடம் பெறவில்லை என்பதற்காக அந்த மாநிலத்திற்கு நிதி செல்லவில்லை என்று அர்த்தமில்லை. இது சம்பந்தமான தவறான புரிதலோடு கருத்துக்களை சிலர் வெளியிடுகிறார்கள் இது எனக்கு ஆழ்ந்த வருத்தங்களை கொடுத்திருக்கிறது.

2005- 06 நிதி ஆண்டு பட்ஜெட்டில் 18 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை.

2006- 2007 நிதியாண்டில் 13 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடவில்லை

2007 – 2008 நிதியாண்டில் 16 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை
ஒவ்வொரு மாநிலத்தின் பெயரையும் சொல்ல முடியாது – நிர்மலா சீதாராமன்

2009 – 2010 ஆண்டுகளில் 26 மாநிலங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை .

2009 நிதி ஆண்டில் பீகார், உத்தரபிரதேசம் இரண்டு மாநிலங்களின் பெயர்களை தவிர வேறு எந்த மாநிலங்களின் பெயர்களும் இடம் பெறவில்லை. நீங்கள் செய்தால் தவறு இல்லை நாங்கள் செய்தால் தவறா?

மத்திய பட்ஜெட்டில் எந்த மாநிலத்திற்கும் அநீதி இழைக்கப்படவில்லை; 2 மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது;

இந்த பட்ஜெட்டில் ரூ.9,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் கேரளாவிற்கு அளிக்கபட்டுள்ளது; மக்களின் மனங்களில் எதிர்க்கட்சிகள் சந்தேகங்களை விதைத்து வருகின்றன” என்று கூறினார்.

மேலும் அவர், எஸ்சி / எஸ்டி மக்களுக்கு நிதி ஒதுக்குவது குறித்து கேள்வி கேட்பவர்கள் கர்நாடகாவை பார்க்க வேண்டும்; எஸ்சி/எஸ்டி மக்களுக்கான நிதியை கர்நாடக அரசு தவறாக பயன்படுத்தியுள்ளது என்று கூறினார்.

விவசாயிகள் நலன் பற்றி தற்போது காங்கிரஸ் கட்சி முதலை கண்ணீர் வடிக்கலாம். ஆனால் கடந்த காலங்களில் அவர்கள் விவசாயிகள் நலனுக்காக எதுவும் செய்யவில்லை என்பதுதான் உண்மை. பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் பல்வேறு விவசாயிகள் திட்டங்களை சுட்டிக்காட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் பதில் அளித்துள்ளார்

2014 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை இந்திய அரசு சுமார் 12.5 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ள நிலையில் முந்தைய காங்கிரஸ் தலைமையிலான 10 ஆண்டு கால ஆட்சியில் உருவாக்கப்பட்ட வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை வெறும் 2.9 கோடி மட்டும் தான் என்று கூறியுள்ளார்.