அரசியல் தமிழ்நாடு

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

  • September 15, 2024
  • 0

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமகதான்-திருமா

வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் அவர்களுடன் இணைந்து பயணிக்க முடியாது என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் மது ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மகளிர் அணி சார்பில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்க அதிமுக மற்றும் விஜய்யின் தவெக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழக அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு விசிக அழைப்பு விடுத்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் திருமாவளவனின் ட்வீட்டர் பக்கத்தில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசும் வீடியோ வெளியிடப்பட்டது. முதல் இரண்டு முறை இந்த வீடியோ வெளியிடப்பட்டு பின்னர் டெலிட் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த வீடியோ வெளியிடப்பட்டது.

இந்நிலையில் விசிக தலைவர் திருமாவளவன் திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிடப்பட்டது குறித்தும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டிற்கு பாமக ஆதரவு தெரிவித்திருப்பது குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, மது ஒழிப்பு மாநாட்டில் திமுக மற்றும் அதிமுக பங்கேற்க வேண்டும். மது ஒழிப்பு மாநாட்டில் அரசியல் கணக்கு எதுவும் இல்லை.

ட்வீட்டர் பக்கத்தில் வீடியோவை பதிவிட்ட அட்மின் வாக்கியங்கள் முழுமை பெறாமல் இருந்ததால் அப்பதிவை டெலிட் செய்தார் எனவும் பின்னர் தன்னுடைய வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் அந்த வீடியோ பதிவு செய்யப்பட்டது என்றும் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். மேலும்
அதிகாரத்தை பகிர்ந்து அளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம் என்றும் யாரையும் மிரட்டுவதற்காக வைக்கப்படும் கோரிக்கை அல்ல என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். யாரையும் குறைத்து மதிப்பிடவோ காயப்படுத்தவோ நான் விரும்பவில்லை. பாமக உடன் தங்களால் இணைந்து பயணிக்க முடியாத நிலை உள்ளது. வெறுப்பு அரசியலை விதைத்தது பாமக தான் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.