மார்க்கெட் மாஸ்டர் என்ற போலி நிறுவனம் மூலம் 30 கோடி ரூபாயை இழந்த வாடிக்கையாளர்கள்.. சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் ….
மார்க்கெட் மாஸ்டர் என்ற போலி நிறுவனம் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் 30 கோடி ரூபாய்க்கு மேல் இழந்துள்ளனர். மேலும் நிறுவனத்தை நடத்தியவர் தற்போது தலைமறைவாக இருப்பதால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களில் ஒருவரான ரமணகுமரன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.
சேலம் மாவட்டத்தில் சமீப காலமாக whatsapp குறுஞ்செய்தியில் மார்க்கெட் மாஸ்டர் என்னும் நிறுவனம் பெயரில் வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் வந்துள்ளது. கபீர்கான்ன என்பவர் அனுப்பும் லிங்கில் உள்ள மார்க்கெட் மாஸ்டர் என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்து அதில் முதலீடு செய்தால் இரு மடங்கு லாபம் கிடைக்கும் என நம்ப வைத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் 30,000ஆயிரம் ரூபாய் பணத்தை சேர்த்துள்ளனர். அதிக லாபம் கிடைக்கும் என்ற நோக்கில் வாடிக்கையாளர்கள் பல ஆயிரக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ள நிலையில் தற்போது மார்க்கெட் மாஸ்டர் whatsapp லிங்கை அனுப்பிய கபீர் கண்ணா மற்றும் மார்க்கோ ஆகிய இருவரும் தற்போது தலைமறைவாகியுள்ளனர்.
12000 24 ஆயிரம் 47 ஆயிரம் 99 ஆயிரம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் மூன்று லட்சம் என பல திட்டங்களை அறிவித்து ஆசை வார்த்தைகளை கூறி அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை தொடர்ந்து வாடிக்கையாளர்கள் பலர் தங்களை இணைத்துக் கொண்டு 30 கோடி ரூபாய் வரை பணத்தை இழந்துள்ளனர். தற்போது மாயமாகி உள்ள கபீர் கண்ணா மற்றும் மார்க்கோ ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட பணத்தை திரும்ப பெற்றுத் தருமாறு மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர்.