15/07/2026
தமிழ்நாடு

சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் – ஜவாஹிருல்லா

  • July 15, 2026
  • 0

சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்; திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் லாக்கப் மரணம் அதிமுக ஆட்சியை பறிகொடுத்து போல தமிழக வெற்றிக்கழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்

சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும் – ஜவாஹிருல்லா

சபரி வர்மன் உயிரிழப்புக்கு உரிய விசாரணை நடத்த வேண்டும்; திமுக கூட்டணியில் தொடர்ந்து பயணிப்போம் என்றும் லாக்கப் மரணம் அதிமுக ஆட்சியை பறிகொடுத்து போல தமிழக வெற்றிக்கழக அரசும் கவனத்தில் கொள்ள வேண்டுமென மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா தென்காசியில் பேட்டி..

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் மனித நேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக அமைப்பின் தலைமை செயற்குழு கூட்டம் இன்று தனியார் திருமண அரங்கில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவரும் நாகை சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா கலந்து கொண்டு, நிகழ்ச்சியில் பேருரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது-

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் சபரி வர்மன் என்ற மாற்றுத் திறனாளி காவல் நிலையத்தில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளார். இது ஒரு சிறை மரணமாக இந்த ஆட்சியில் நடைபெற்ற கூடிய ஒரு துயர சம்பவமாகும்.

அவர் நல்ல நிலையில் லாக்கப்பில் இருக்கக்கூடிய காட்சிகள் வெளிவந்திருக்கின்றன. என்ன குற்றம் செய்தாலும் அதற்கு தண்டனை வழங்க கூடிய அதிகாரம் நீதிமன்றத்துக்கு தான் இருக்கிறது. காவல்துறையினரே தண்டனையை நிறைவேற்றக்கூடிய அதிகாரத்தை பெற்றால் அதை மிகப்பெரிய மனித உரிமை மீறலாக ஜனநாயக அரசமைப்பு சட்டவிரோத நடவடிக்கையாக மாறிவிடும்.

சென்ற அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் தந்தையும் மகனும் இது போன்ற ஒரு காவல்துறை பிடியில் சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்தனர். அது அதிமுக ஆட்சி பறி போனதற்கு காரணமாக அமைந்தது.

அதே கஸ்டடியில் டெத் இந்த ஆட்சியிலும் தொடர்வது எந்த வகையிலும் ஏற்புடையது அல்ல. இது குறித்து உரிய விசாரணை நடத்தி இதற்கு காரணமான காவல் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாங்கள் திமுக கூட்டணியில் தொடர்ந்து உறுதியாக பயணித்து வருகிறோம்.

திமுக கூட்டணியின் சார்பாக தான் வரவிருக்கும் இடைத்தேர்தல்கள் அடுத்து வரவிருக்கும் தேர்தல்களில் நாங்கள் இடம் பெறுவோம். தமிழக வெற்றிக்கழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவருமே புதியவர்கள். எனவே அக்கட்சியின் ஆட்சி முறை குறித்து உடனடியாக குறை சொல்வது என்பது ஏற்கக் கூடியதாக இருக்காது.

குற்றங்களை தடுக்க கூடிய வகையில் நடவடிக்கைகள் கடுமையாக எடுக்க வேண்டும் குற்றங்கள் குறித்து விரைந்து விசாரணை நடத்துவதற்காக விரைவு நீதிமன்றங்களை இந்த அரசு அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்க வைக்கிறேன். பாலியல் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார் இந்த சந்திப்பின்போது கட்சியின் மூத்த நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

குற்றாலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் மாநிலத்திலிருந்து அனைத்து மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *