News சினிமா தமிழ்நாடு

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் தமிழ் படங்கள்

  • July 23, 2024
  • 0

அந்தகன்இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியக் கொண்டாட்டத் தினங்களில் ஒன்றாக ஆகஸ்ட் 15 இருக்கப் போகிறது. வியாழன் தொடங்கி ஞாயிறு வரைத் தொடர்ந்து நான்கு நாள்கள் கிடைத்திருப்பதால், பலரும் விடுமுறை மூடில் இருப்பார்கள் என்பதால் பல படங்கள் ரிலீஸ்

ஆகஸ்ட் 15ல் வெளியாகும் தமிழ் படங்கள்

அந்தகன்
இந்த வருடத்தில் தமிழ் சினிமாவின் முக்கியக் கொண்டாட்டத் தினங்களில் ஒன்றாக ஆகஸ்ட் 15 இருக்கப் போகிறது.

வியாழன் தொடங்கி ஞாயிறு வரைத் தொடர்ந்து நான்கு நாள்கள் கிடைத்திருப்பதால், பலரும் விடுமுறை மூடில் இருப்பார்கள் என்பதால் பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

டாப் ஸ்டார் பிரஷாந்தின் ‘அந்தகன்’, பா.இரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் ‘தங்கலான்’, கீர்த்தி சுரேஷின் ‘ரகு தாத்தா’ ஆகிய படங்கள் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டனர். மேலும் பல படங்கள் அதே தினத்தன்று வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.

தங்கலான்
நீண்ட மாதங்களாக ரிலீஸுக்கு எதிர்பார்க்கப்பட்ட படம் ‘அந்தகன்’. தியாகராஜன் இயக்கி தயாரித்திருக்கிறார். பாலிவுட்டில் பட்டையைக் கிளப்பிய ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக்கிது. ஆகஸ்ட் 15ல் வெளியாகும் இப்படத்தின் புரொமோஷன் பாடலான ‘தி அந்தகன் ஆன்தம்’ பாடலை விஜய் வெளியிடுகிறார். இந்தப் பாடலை விஜய் சேதுபதியும், அனிருத்தும் இணைந்து பாடியுள்ளனர். பிரபுதேவா நடனம் அமைத்திருக்கிறார். இப்படி மெகா கூட்டணி இணைந்துள்ள இந்தப் பாடல் நாளை வெளியாகிறது.

கீர்த்தி சுரேஷ்
பா.இரஞ்சித் – விக்ரம் கூட்டணியின் ‘தங்கலான்’ மேக்கிங் வீடியோக்கள், பாடல் என எல்லாமே விக்ரம் உட்பட ஒட்டு மொத்த குழுவின் உழைப்பையும் பிரதிபலித்திருக்கின்றன. கடந்த ஜூன் மாதம் இரண்டாம் வாரமே இந்தப் படம் வெளியாகியிருக்க வேண்டும். தனுஷின் ‘ராயன்’ ரிலீஸ் ஆகிறது என்ற காரணத்தால் இந்தப் படத்தை ஜூலைக்கு ஒத்தி வைத்தனர். ஆனால், தனுஷின் படம் இப்போது ஜூலை 26 வெளியாகும் என அறிவித்துவிட்டதால், ‘தங்கலான்’ படத்தை ஒரேடியாக ஆகஸ்ட் 15 அன்று ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். ‘தங்கலான்’ படக்குழு தனது புரொமோஷன்களைத் தொடங்கிவிட்டது. ‘பொன்னியின் செல்வன்’ டீம் போல, இந்தப் படக்குழுவும் பல ஊர்களுக்கு புரொமோஷனுக்குச் செல்ல உள்ளதாகத் தகவல்.

கீர்த்தி சுரேஷ் நடித்த ஹீரோயின் சென்ட்ரிக் படமான ‘ரகு தாத்தா’வும் ஆகஸ்ட் 15ல் வெளிவருகிறது. ‘கே.ஜி.எஃப்’ மற்றும் ‘காந்தாரா’ படங்களைத் தயாரித்த ஹோம்பாலே நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது. தமிழில் கீர்த்திக்கு இந்தப் படம் சிறந்த கம்பேக் படமாக இருக்குமென எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேற்கண்ட ரேஸில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடித்த ஹாரர் படமான ‘டிமான்ட்டி காலனி 2’ படமும் ஆகஸ்ட் 15 ரிலீஸிற்கான திட்டமிடலைத் தொடங்கியுள்ளது. அதற்கான அறிவிப்பும் வெளியாகிவிட்டது.

டிமான்ட்டி காலனி 2
சுதந்திர தின திரை விருந்தில் பாலாவின் ‘வணங்கான்’ படமும் வெளியாகலாம் என்ற பேச்சு இருக்கிறது. ஆகஸ்ட் ரிலீஸ் என பொத்தம் பொதுவாகப் பேச்சு இருந்தாலும், முதல் பிரின்ட் நாளைதான் ரெடியாகிறது என்பதால், படத்தைப் பார்த்துவிட்டு ரிலீஸ் தேதியை அறிவிக்கலாம் என்கின்றனர். சென்ஸாருக்கு பின், ரிலீஸ் தேதியை அறிவிப்பார்கள்.

கூட்டத்தோடு வெளியிட்டால், போதுமான திரையரங்குகள் கிடைக்காமல் போய்விடும் என்பதால், ஆகஸ்ட்டிலேயே இன்னொரு தேதியிலும் அந்தப் படத்தை கொண்டு வரலாம் அல்லது ஆகஸ்ட் 15 ரிலீஸில் எதாவது ஒரு படம் பின்வாங்கினால், அதற்கு பதிலாக ‘வணங்கான்’ வந்துவிடுவான் என்றும் சொல்கின்றனர்.