News அரசியல் தமிழ்நாடு

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

  • July 21, 2024
  • 0

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது

செந்தில் பாலாஜி ஸ்டான்லி மருத்துவமனையில் திடீர் அனுமதி!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி செந்தில் பாலாஜியை சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத் துறை கைது செய்தது.

செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், உடனே இதய பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டது.

உயர்நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். எனினும், அவரை அமைச்சர் பதவியில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நீக்கவில்லை. இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அறிவித்தார்.

அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படும் நிலையில், அதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று திரும்பிச் செல்கிறார் செந்தில் பாலாஜி. இந்த சூழலில் புழல் சிறையில் செந்தில் பாலாஜிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. மதிய உணவு சாப்பிட்ட பின் நெஞ்சு வலிப்பதாக செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் மூலமாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

செந்தில் பாலாஜி கைது செய்யபட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், 43வது முறையாக அவரது நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன. ஜாமீன் கிடைக்க தடையாக இருந்ததால் செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.

தற்போது உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு விசாரணையில் இருந்து வருகிறது. நாளை இந்த வழக்கு விசாரணைக்கு வரும் நிலையில், செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது முக்கியமானதாக மாறியுள்ளது.