தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் தான் ராம் சரண், இவர் தெலுங்கி முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். RRR படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இப்படத்திற்கு பிறகு ராம் சரண் தனது சம்பளதை உயர்த்தியுள்ளதாகவும் தகவல் எழுந்துள்ளது, தற்போது ஷங்கர் இயக்கும் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் ராம் சரண் அப்பல்லோ மருத்துவமனை நிறுவனர் டாக்டர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனியை திருமணம் செய்து கொண்டார், திருமணமாகி 10 ஆண்டுகள் கழித்து கடந்த ஆண்டு இந்த தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது.
பிறந்த குழந்தைக்கு கிளின் காரா என்று பெயரிட்ட அவர்கள், குழந்தையின் முகத்தை வெளியே காட்டாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் குழந்தையின் முகத்தை ராம்சரன் – உபாசனா தம்பதி முதன் முறையாக வெளிபடுத்தி உள்ளனர்.
ராம் சரண் தனது மகள் நடிகையாக இருக்க நான் விரும்பவில்லை, அம்மாவை போல் ஒரு தொழிலதிபராக இருக்க வேண்டு என நான் விரும்புகிறேன். குடும்பத்தில் நடிகர்கள் இருப்பதால் மகளுடன் போட்டியிட விரும்பவில்லை என்று ராம்சரன் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.