News

சென்னை அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்?

  • June 19, 2025
  • 0

சிஎஸ்கே அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைய போறாரு அப்படின்ற செய்தி கடந்த ஒரு மாதமாகவே பரவிட்டு வருது . இப்போ அது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கு. இதுவரை 10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில்

சென்னை அணிக்கு வரும் சஞ்சு சாம்சன்?

சிஎஸ்கே அணியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் இணைய போறாரு அப்படின்ற செய்தி கடந்த ஒரு மாதமாகவே பரவிட்டு வருது . இப்போ அது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கு.

இதுவரை 10 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், அதில் 8 ஆண்டுகள் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காகத்தான் விளையாடி இருக்காரு. அந்த அணியின் கேப்டனாகவும் 2021ல இருந்து இருந்துட்டு வராரு…

ஆனா, 2025 ஐபிஎல் தொடர் சஞ்சு சாம்சனுக்கு நல்லபடியாக அமையல. விரலில் ஏற்பட்ட காயத்தால விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தாரு.. அவருக்கு பதிலாக ரியான் பராக் கேப்டனாக செயல்பட்டரு..

இப்படி இருக்கும்போது, சஞ்சு சாம்சனுக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து வேறுபாடுகள் இருப்பதாக சொல்லப்படுது. இதனால, சாம்சன் ராஜஸ்தான் அணியிலிருந்து விலக இருக்கர்தாக்வும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை அப்படின்றதுனால அவர் cskக்கு போகபோறார்ன்னு சொல்லப்படுது.

இது இல்லாம, சென்னை சூப்பர் கிங்ஸ்ல தோனி அடுத்த வருஷம் விளையாடுவாரா என்ற சந்தேகம் இருந்துட்டு இருக்கு. அவர் இல்லை அப்படின்னா, அவருக்கு இணையா விளையாட்ரதுக்கு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவை. இந்த நிலையில்தான் சஞ்சு சாம்சன் விலக இருக்கும் செய்திகள் வெளியாகிட்டு வருது.

இப்படி தான், சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து விலகி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மாறப் போவதாக ரசிகர் ஒருவர் வெளியிட்ட பதிவுக்கு சஞ்சு சாம்சனின் மேலாளர் ‘லைக்’ போட்ருக்காரு. இது ஐபிஎல் ரசிகர்கள் மத்தியில பேசு பொருளாவும் மாறி இருக்கு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *