News தமிழ்நாடு

காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடை திரும்ப பெற வேண்டும்..! – தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நல சங்கம்

  • June 19, 2025
  • 0

மதுரை மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஆர் வி ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். பின்னர் இந்த கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதில் காலி பாட்டில்களை உடனடியாக திரும்பப்

காலி மது பாட்டில்களை டாஸ்மாக் கடை திரும்ப பெற வேண்டும்..! – தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நல சங்கம்

மதுரை மண்டல தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில தலைவர் ஆர் வி ஆனந்த் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

பின்னர் இந்த கூட்டத்தில் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. அதில் காலி பாட்டில்களை உடனடியாக திரும்பப் பெரும் திட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும்.

கடந்த ஆண்டு 20 முறைக்கும் மேலாக நீதிமன்ற கண்டனத்திற்கு ஆளான டாஸ்மாக் நிறுவனம் இதை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு திருமணங்கள் நிறைவேற்றப்பட்டது

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநில தலைவர் ஆர் வி ஆனந்த்

கடந்த 2024 பிப்ரவரி டெண்டர் அறிவிக்கப்பட்டு எவ்வித காரணமும் சொல்லாமல் நிராகரிக்கப்பட்டது, அதன் பிறகு 2025 மார்ச் மாதம் டெண்டர் ஓபன் செய்யப்பட்டு நான்கு மாதம் ஆகியும் விலை பட்டியல் இன்னும் திறக்கப்படவில்லை. இதனால் அரசுக்கு வருடத்திற்கு 200 கோடிக்கு ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்படுகிறது.

அதோடு கால்வாய் வாய்க்கால் நீர்நிலைகள் விவசாய நிலங்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் வியாபாரிகள் நலம் பெறவும் உடனடியாக டெண்டர் அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பாட்டில் வியாபாரிகள் நல சங்கம் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைப்பதாக கூறினார்

இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக குமரகுரு, பொதுச் செயலாளர் தேனி சிவகுமார், ஒருங்கிணைப்பாளர் முகமது நபி,
மண்டல செயலாளர் ரூபன் ராஜ், பொருளாளர் நந்தகோபால் அமைப்புச் செயலாளர் சம்பத் ராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்