01/06/2026
News தமிழ்நாடு

அண்ணாமலை சொல்வது முற்றிலும் பொய் – அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்

  • August 6, 2025
  • 0

சிவகங்கை அருகே உள்ள கல்குளத்தில் சிவகங்கை சுற்றுச்சாலையின் ரூ 96 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்,

அண்ணாமலை சொல்வது முற்றிலும் பொய் – அமைச்சர் கேஆர். பெரியகருப்பன்

சிவகங்கை அருகே உள்ள கல்குளத்தில் சிவகங்கை சுற்றுச்சாலையின் ரூ 96 கோடி மதிப்பீட்டில் இரண்டாம் கட்ட பணியினை கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி துவக்கி வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஆர். பெரியகருப்பன், தமிழகம் முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் 10 ஆயிரம் இடங்களில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 250 முகாம்களில் நடத்த திட்டமிடப்பட்டு நாள்தோறும் 6 முகாம்கள் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது.

உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு மக்கள் எதிர்பார்ப்புடன் வருகின்றனர். முதலமைச்சரின் மீது உள்ள நம்பிக்கையால், நம்பிக்கையுடன் திரும்பிச் செல்கின்றனர். ஒரு சில பணிகளுக்கு முகாம்களில் தீர்வு காணப்பட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. பிற மனுக்கள் மீது அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு 45 தினங்களுக்குள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. சராசரியாக ஒவ்வொரு முகாம்களுக்கும் ஆயிரம் மனுக்கள் வருகின்றன. உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் மகளிர் உதவித்தொகை கேட்டு கூடுதலாக மனுக்கள் வருகின்றன. மகளிர் உரிமைத் திட்டம் கிடைக்காத எஞ்சியவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் தளர்வுகளை மேற்கொண்டுள்ளார்.

நாட்டாகுடியில் வசிப்பவர்களிடையே முன் விரோதம் இன்றி இரண்டு கொலைகள் நடைபெற்றுள்ளது. கிராமங்களில் இருந்து நகரங்களை நோக்கி கல்வி, வேலைவாய்ப்பு, போன்ற காரணங்களுக்காக இடம் பெயர்வது வாடிக்கை. அதை போல் நாடாகுடியிலிருந்து சிவகங்கைக்கு, அக்கிராம மக்கள் குடிபெயர்த்துள்ளனர். இரு கொலைகள் நடைபெற்றதால் அக்கிராம மக்களிடையே அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. நாட்டாகுடியில் தண்ணீர், சாலை, மின்சாரம், அலுவலக பணி போன்ற அடிப்படை வசதிகள் அரசு சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தவில்லை என கூறும் பாஜக முன்னால் தலைவர் அண்ணாமலை சந்தேகம் இருந்தால் நாட்டாகுடிக்கு வந்து நேரடியாக பார்வையிடட்டும் என்றார். அண்ணாமலையின் அறிக்கை அமைதியாக வாழும் மக்களிடையே பீதியை கிளப்பும் விதமாக உள்ளது. இதனை அண்ணாமலை தவிர்க்க வேண்டும் எனகே ஆர் பெரிய கருப்பன் கேட்டுக்கொண்டார்.