புதுச்சேரி அரசு சார்பில் மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் ஏழாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பாஜக தலைவர் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு,வாஜ்பாயின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
இதேபோன்று புதுச்சேரி மாநில பாஜக அலுவலகத்தில் வாஜ்பாய் ஏழாம் ஆண்டு நினைவு தினம் மற்றும் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசனுக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட பாஜக மாநில தலைவர் வி.பி.ராமலிங்கம் தலைமையில் பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
நிகழ்ச்சியில் மாநில பொது செயலாளர்கள் மோகன் குமார், லக்ஷ்மி நாராயணன் மாநில செயலாளர் ராமு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்கள்.