15/05/2026
News அரசியல் தமிழ்நாடு

தூத்துக்குடியா? திருச்சியா? பிரதமர் மோடியை ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கிறாரா?

  • July 25, 2025
  • 0

நாட்டில் இதுவரையிலும் 140க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கமும் செய்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி., தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.! தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி

தூத்துக்குடியா? திருச்சியா? பிரதமர் மோடியை  ஓ. பன்னீர்செல்வம் சந்திக்கிறாரா?

நாட்டில் இதுவரையிலும் 140க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கமும் செய்துள்ளார் பாரத பிரதமர் நரேந்திர மோடி.,

தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி.!

தூத்துக்குடி விமான நிலையத்தில் 452 கோடி மதிப்பில் விரிவாக்க பணிகள் நடைபெற்று விரிவாக்கப்பட்ட கட்டடத்தை மோடி வரும் 26 ஆம் தேதி நாளை இரவு 8:30-க்கு திறக்க உள்ளார். தொடர்ந்து விமான நிலைய திறப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் அங்கு அமைக்கப்பட்டுள்ள விழா மேடையில் கலந்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சியில் சுமார் 10,000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வதற்காக பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமான நிலையத்தில் மேடை அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், இரண்டு நாள் பயணமாக பிரதமர் தமிழகம் வருகிறார். 450 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்க வருகிறார். ரயில்வே உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த 4500 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான திட்டங்களையும் தொடங்கி வைக்க உள்ளார்.

நாளை மறுதினம் ராஜேந்திர சோழனின் புகழையும், பெருமையும் பாதுகாக்கும் வகையில் கங்கைகொண்ட சோழபுரத்தில் தரிசனம் செய்கிறார். அங்கே நடைபெறுகின்ற கலை நிகழ்ச்சிகளும் கலந்து கொள்கிறார். இது தமிழகத்திற்கு கிடைத்திருக்கிற மிகப்பெரிய பெருமை. நாட்டில் இதுவரையிலும் 140க்கும் மேற்பட்ட விமான நிலையங்களை உருவாக்கியும், விரிவாக்கமும் செய்துள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு பிரதமர் வருவது நமக்கு பெருமை. மேலும், இந்த ரன்வெயில் மீனவர்களை பாதுகாக்க கடலோர காவல் படை விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

தூத்துக்குடியில் நாளை பிரதமர் மோடியை முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பதாக வரும் தகவல் பற்றி கேட்டதற்கு.,? நாளை பிரதமர் மோடியை ஓபிஎஸ் சந்திக்கிறாரா? என்பது பற்றி எனக்கு தெரியாது. ஒருவேளை திருச்சியில் வைத்து சந்திக்கிறாரா? என்பது பற்றியும் எனக்கு தெரியாது.

நாளைய நிகழ்ச்சிக்கு
தமிழக முதல்வர் வருவதாக இருக்கிறது. துணை முதல்வர் வருகிறார் என்று சொல்கிறார். இதுபோன்ற நல்ல நிகழ்வுகளில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்பது எங்களின் விருப்பம். நாட்டு மக்களுக்கு நடைபெறும் நல்ல நிகழ்ச்சியில் அவர்களும் கலந்து கொள்வது அவசியம். மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்துள்ளது. நாட்டுக்கு 4500 கோடி ரூபாய் தரக்கூடிய சூழலில் அவர்களும் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றார்.