விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பெரிய மாரியம்மன் கோவில் உள்ளது இந்த கோவிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் வீட்டில் வைத்து ஆபாச நடனம் குறித்த வீடியோ மற்றும் மாரியம்மன் கோவிலில் பெண் பக்தர்கள் முகத்தில் விபூதி அடித்து அத்துமீறி நடந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிய நிலையில் இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு அமைப்பினர் அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் ஜூலை இரண்டாம் தேதி நடைபெற உள்ள நிலையில் இக்கோயிலின் உதவி அர்ச்சகர் கோமதிவிநாயகம் மேலும் பணிக்கு வந்த மற்ற அர்ச்சகர்கள் கணேசன்,வினோத், வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாண்டியராஜன் என்பவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் அடிப்படையில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்து தலைமறைவான அச்சகர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
மேலும் ஆபாசமாக நடனமாடிய வீடியோவை சமூக வலைத்தளங்களில் பரப்பிய சபரிநாதன் என்பவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அர்ச்சகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் பகுதியில் ஸ்ரீ பெரிய மாரியம்மன் பக்தர்கள் குழு சார்பில் ஏராளமான ஆண்கள் பெண்கள் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்