01/06/2026
News தமிழ்நாடு

பழனிச்சாமி மோடி கூட கொஞ்சு குழாவுகின்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன்

  • June 30, 2025
  • 0

மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் கலந்துக் கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.. மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள

பழனிச்சாமி மோடி கூட கொஞ்சு குழாவுகின்கிறார் – விசிக தலைவர் திருமாவளவன்

மேலூர் அருகே மேலவளவு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உள்ளிட்டவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நினைவு நாளில் கலந்துக் கொண்டு விசிக தலைவர் திருமாவளவன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்..

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள மேலவளவு கிராமத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகேசன் உட்பட 7 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட தினத்தின் முன்னிட்டு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் மேலவளவில் உள்ள அவரது நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

தொல் திருமாவளவன் கூட்டத்தில் பேசிய போது;

தமிழ் மண்ணில் நான் அறிந்த வரை மேலவளவு முருகேசன் துணிந்து சாவை அழைத்தவன்.. சாதி வெறியர்கள் அச்சுறுத்தல் விடுத்த நிலையில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் உரிமையை வென்று எடுத்து தீருவேன் என்ற போராளி முருகேசன்.

மேலூர் மண்ணிலிருந்து உருவானது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி. இன்றைக்கு யாராலும் வீழ்த்த முடியாத அளவிற்கு உருவாகி உள்ளது. மேலவளவு முதல் புதுதில்லி வரை விரிவாக்கம் செய்ய வேண்டும். அம்பேத்கர் கண்ட கனவு. ஒடுக்கப்பட்ட மக்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் வேண்டும். இந்த தொலைநோக்கு விசிக கட்சிக்கு உண்டு..

முருக பக்தர்கள் மாநாடு மதுரையில் 5 லட்சம் பேர் கூடினார்கள் என செய்தி வெளியானது. மாலை நாளிதழில் திரண்டனர் என போட்டனர். விசிக செய்தியை 3 காலம் தான் போட்டனர்.

அங்கு அண்ணா, பெரியாரை கொச்சை படுத்தினார்கள். அம்பேத்கரை கொச்சை படுத்த முடியாது. அரசியலமைப்புச் சட்டத்தை மோதி, அமித்ஷா பலவீனப்படுத்துவார்கள்.

மோதி பதவி ஏற்றவுடன் மதச்சார்பின்மைக்கு ஆபத்து என தொடர்ந்து கூறி வருகின்றேன். ஆனால் இன்றைக்கு அரசாங்கமும் பாஜக என்கிற அரசியல் கட்சியும் மதம் சார்ந்த இயங்குகிறது .

மதத்தை எதிர்த்து இயங்குகிறது முஸ்லிம் மதத்திற்கு எதிராகவும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிராகவும் வெறுப்பு அரசியலை எடுக்கிறது. நாம் இதை எதிர்த்து பேச நான் முஸ்லிம்களுக்காக, கிறிஸ்தவர்களுக்கு வும் மட்டுமே பேசுகிறார்கள் அவர்களுக்கு சொல்லுகிறேன் என்பதை விட உங்களுக்கு சொல்லுகிறேன் புரட்சியாளர் அம்பேத்கருடைய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பதற்காக பேசுகிறோம்

கூட்டணி ஆட்சி அமைப்போம் எனஅமிர்ஷா கூறி வருகிறார் ஆனால் அண்ணன் எடப்பாடி பழனிச்சாமி ஏன் சொல்லாமல் இருக்கிறார் என கேள்வி எழுப்பி வந்ததும் விசிக தான் மோடியா, லேடியா என மோதி பார்ப்போம். என ஜெயலலிதா அம்மையார் கூறினார். இன்று எடப்பாடி பழனிச்சாமி மோடி கூட கொஞ்சு குழாவுகின்கிறார் என்று திருமாவளவன் அப்போது பேசினார்.