காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அமல்படுத்தப்பட்ட “எமர்ஜென்சி” 50 ஆண்டுகள் நிறைவு – பாஜக சார்பில் கருப்பு தினமாக அனுசரிப்பு
எமர்ஜென்சி காலகட்டத்தில் மக்கள் சந்தித்த துன்பங்கள் குறித்த தேனி மாவட்ட பாஜக சார்பில் கண்காட்சி காட்சிப்படுத்தப்பட்டது
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் அவசர நிலை பிரகடனம் (எமர்ஜென்சி) அமல்படுத்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவு பெற்றது.
இதனை இந்தியாவின் “கருப்பு தினமாக” அனுசரிக்கப்பட்டு பாஜக சார்பில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சி கூட்டம் தேனி மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
தேனி மாவட்ட பாஜக தலைவர் ராஜபாண்டி தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி, மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்க பெருமாள் உள்ளிட்ட மாவட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எமர்ஜென்சி காலகட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் துன்புறுத்தலுக்கு ஆளாகியது குறித்து புகைப்பட வடிவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் மகாலட்சுமி கூறும்போது
1975 ஆம் ஆண்டு எமர்ஜென்சி காலகட்டத்தில் மக்கள் பெரிதும் அவதி அடைந்தனர், எதிர்க்கட்சித் தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர் அதனை பாஜக கருப்பு தினமாக அனுசரிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தனது சுயநலத்திற்காக அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்களின் உரிமை பறிக்கப்பட்டது.
அதன் பின்பு காங்கிரஸ் ஆட்சியில் மிசா கொண்டுவரப்பட்டு ஒன்றரை லட்சம் மக்கள் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
காங்கிரஸ் ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் அவல நிலையை மக்களிடையே தெரியப்படுத்தவே இந்த கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.