ஆடி மாதம் அம்மன் கோவில்களுக்கு சிறப்பு வாய்ந்த மாதம் அப்படின்றதுனால, தமிழ்நாட்டில இருக்க மிகவும் பிரபலமான கோவில்களுக்கு ஒரு பைசா காசு வாங்காம தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை கூட்டிடு போக போறாங்க…
இந்த ஆன்மீக சுற்றுலாவுக்கு போக என்ன தகுதிகள் இருக்கனும்ன்னு இப்போ பார்க்கலாம்,
இந்து மதத்த சேர்ந்தவரா இருக்கனும்.
உங்களுக்கு 60-70 வயசுக்குள்ள தான் இருக்கனும்.
ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்குள்ள தான் இருக்கனும்.
உடல் நலன் ஆரோக்கியமா இருக்கனும்.
ஆதார் அட்டையுடன் பான் அட்டை இணைத்திருக்க வேண்டும்.
முக்கியமா இந்த ஆன்மிக பயணத்துல சிறு குழந்தைகளை அழைத்து வர அனுமதி கிடையாது..
மொத்தம் 5 கட்டங்களா இந்த பயணம் இருக்க போகுது.
இந்த பயணதுக்கு போக்ர்துக்கு www.hrce.tn.gov.in என்ற இணையதளதிற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு பிறகு, சென்னை, தஞ்சாவூர், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், திருநெல்வேலி மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகத்துக்கு விண்ணப்பிக்கனும். ஒரு வேலை உங்களுக்கு இதுல எதாவது சந்தேகம் இருந்தா ,,உங்க ஊர்ல இருக்க இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்துல போய் கேட்டு தெரிஞ்க்கோங்க….