நீங்க சொன்னது தப்பா இல்லையா சார்…உயிர் போற பிரச்சனையில உங்க கிட்ட வந்து பெட்டிஷன் கொடுத்துகிட்டு இருப்பாங்களா…?தனியாக வந்து சிக்கிக்கொண்ட காவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பயணிகள்.தங்கள் ஊருக்கு செல்லும் பேருந்து மூன்று மணி நேரமாக வராத நிலையில் மெடிக்கல் காலேஜுக்கு மாற்றி விடப்பட்ட அந்த பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளால் பரபரப்பு.
திருவாரூரில் இருந்து நாகலூருக்கு B5 என்கிற அரசுப் பேருந்து தினந்தோறும் சென்று வருகிறது. இந்தப் பேருந்தில் சுந்தர விளாகம்,தப்ளாம் புலியூர்,அலிவலம், காரியாங்குடி,ஆந்தகுடி,நாகலூர் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் மாணவ மாணவிகள் என பல்வேறு தரப்பினரும் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.குறிப்பாக மாலை 4.15 மணிக்கும் 6:15 மணிக்கும் இந்த பேருந்து திருவாரூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையம் சென்று நாகலூர் செல்கிறது.
குறிப்பாக மாலை 6:15 மணிக்கு செல்லும் இந்த பேருந்தில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் கட்டுமான தொழிலாளர்கள் கூலித் தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினரும் காத்திருந்து தங்களது ஊர்களுக்கு பயணித்து வருகின்றனர்.இந்த நிலையில் இன்று 6:15க்கு வரவேண்டிய பேருந்து 9:00 மணி வரை வராத காரணத்தினால் ஆத்திரமடைந்த பயணிகள் அந்த பேருந்து திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாறி செல்வதை பார்த்ததும் அந்த பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதன் காரணமாக பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் வாகனங்கள் அனைத்தும் நீண்ட வரிசையில் அரை மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் நிகழ்விடத்திற்கு தனியாக வந்த சீருடையில் இல்லாத காவலரிடம் பயணிகள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.குறிப்பாக அவரிடம் நீங்க சொன்னது தப்பா இல்லையா சார் எப்படி பெட்டிஷன் கொடுக்க முடியும் உயிர் போற பிரச்சினையில உங்களை தேடி வந்து பெட்டிஷன் கொடுத்து கொண்டு இருப்பார்களா…?நாகலூருக்கு போறவங்க எவ்வளவு பேர் நிக்கிறாங்க பாருங்க என கூற பதிலுக்கு காவலர் அங்க பாருங்க எவ்வளவு பேர் நிக்கிறாங்க எனக் கூற நாங்க 6:15 மணியிலிருந்து நிக்கிறோம் இருப்பா அவர் அரெஸ்ட் பண்ண போறாரு அவர் ஒரு போன் பண்ணா பிரச்சனையே முடிஞ்சிடும் அரெஸ்ட் பண்ணுங்க சார் நீங்க வர சொல்லுங்க என்ன நடக்குதுன்னு நாங்க பார்க்கிறோம் என்று ஆவேசமாக அவரிடம் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோன்று மாற்றி விடப்பட்ட சம்பந்தப்பட்ட மெடிக்கல் காலேஜ் செல்லும் பேருந்தின் நடத்துனரிடமும் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் நாங்கள் காத்திருக்கிறோம் என்று அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது அவர் வேறு பேருந்து வரும் என்று கூற மெடிக்கலுக்கு வேற வண்டி இல்லையா நாகலூர் என்று எழுதி இருக்கிற இந்த பேருந்தை நீங்கள் ஏன் எடுத்துச் செல்கிறீர்கள் நாங்கள் 6:15 மணியிலிருந்து நிற்கிறோம் என்று பயணிகள் கூறியதற்கு அதற்கு நான் என்ன செய்ய முடியும் அங்கு சென்று கேளுங்கள் என்று அவர் பதில் கூறினார்.தொடர்ந்து காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்த நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது.